க்ரைம்

ஓசூரில் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வடமாநில தம்பதி - போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

ஓசூர்: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிஸ்வஜித் சங்மா (20). இவரது மனைவி பிரியங்கா மாரக் (18). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணமானது.

இவர்கள் 2 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஷ்சிரியா லே-அவுட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

கடந்த 19-ம் தேதி மாலை பணி முடிந்து இருவரும் வீட்டிற்கு வந்தவர்கள், அதன் பின் வெளியே வரவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (20-ம் தேதி) இரவு பிஸ்வஜித் சங்மாவிற்கு அவரது நண்பர் பலமுறை போன் செய்துள்ளார்.

ஆனால், அவர் போனை எடுத்துப் பேசாததால், அவரைப் பார்க்க வீட்டிற்கு நேரில் சென்றார். அங்கு வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டிற்குள் பிஸ்வஜித் சங்மா மற்றும் அவரது மனைவி பிரியங்கா மாரக் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

தகவலறிந்து வந்த சிப்காட் போலீஸார் 2 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT