க்ரைம்

பாபநாசம் அருகே சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை: 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது

செய்திப்பிரிவு

கும்பகோணம்: சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் 3 சிறு​வர்​கள் உட்பட 7 பேர் போக்சோ சட்​டத்​தின் கீழ் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்களில் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுவர்கள் 3 பேர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். தஞ்​சாவூர் மாவட்​டம் பாப​நாசம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில், 17 வயது சிறுமி ஒரு​வரின் பெற்​றோர் அண்​மை​யில் புகார் மனு அளித்​திருந்​தனர்.

          

அதில், தங்​களது மகளை சிலர் தொடர் பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக​வும், அதனால் அவர் கர்ப்​பம் அடைந்​த​தாக​வும், தொடர்​புடைய​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றும் கூறி​யிருந்​தனர்.

இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை நடத்​தினர். அதில், 2022-ம் ஆண்டு முதல் பல்​வேறு கால​கட்​டங்​களில் 3 சிறு​வர்​கள் உட்பட 8 பேர் அந்​தச் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்​கொடுமை செய்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, இதில் தொடர்புடைய பாப​நாசத்தை அடுத்த சூலமங்​கலத்​தைச் சேர்ந்த சுரேந்​திர பாண்​டியன்​(21), சண்​முகம்​(21), அசோக்​(21), பசுப​தி​கோ​விலைச் சேர்ந்த ஜெயசுதன்​(21) மற்​றும் 3 சிறு​வர்​கள் என 7 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

பின்​னர், பாண்​டியன் உள்​ளிட்ட 4 பேரும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, புதுக்​கோட்டை சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். சிறு​வர்​கள் 3 பேரும் அரசு கூர்​நோக்கு இல்​லத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

மேலும், இதில் தொடர்​புடைய மற்​றொரு நபரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். கர்ப்​பிணி​யாக உள்ள சிறுமி, அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டு, சிகிச்சை பெற்று வரு​கிறார். சிறுமியை 7 பேர் தொடர்ந்து பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கிய சம்​பவம் அப்​பகு​தி​யில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT