க்ரைம்

காங்கிரஸ் அலுவலகத்தில் குட்கா பதுக்கிய நிர்வாகி கைது

செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்​கம் நகர காங்​கிரஸ் கட்சி அலு​வல​கத்​தில் 2 கிலோ புகை​யிலைப் பொருட்​களை பதுக்கி வைத்​திருந்த நிர்​வாகி கைது செய்​யப்​பட்​டார்.

ஸ்ரீரங்​கம் ராஜகோபுரம் முன்​புள்ள பழைய பேருந்து நிலை​யம் அரு​கில் காங்​கிரஸ் கட்​சி​யின் அலு​வல​க​மான காம​ராஜர் அரங்​கம் உள்​ளது. இங்கு நேற்று முன்​தினம் இரவு போலீ​ஸார் சோதனை செய்​த​போது, 2 கிலோ எடை​யுடைய 104 புகை​யிலை பாக்கெட்​டுகள் சிக்கின.

இதனை பதுக்கி வைத்த, காங்​கிரஸ் கட்​சி​யின் ஸ்ரீரங்​கம் கிளைச் செய​லா​ளரான மேல அடைய​வளஞ்​சான் வீதி​யைச் சேர்ந்த நடராஜன் என்ற பாத​யாத்​திரை நடராஜனை போலீ​ஸார் கைது செய்தனர்​.

SCROLL FOR NEXT