கோப்புப் படம்

 
க்ரைம்

75 வயது மூதாட்டியின் நெற்பயிர்கள் விஷ மருந்து தெளித்து அழிக்கப்பட்டதாக புகார்: நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திரு​வள்​ளூர் ஆட்சி​யர் அலு​வல​கத்​தில் நேற்று விவசாயிகள் நலன் காக்​கும் நாள் கூட்​டம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் மெய்​யூர் கிராமத்​தைச் சேர்ந்த பிரேமலதா (75) என்​பவர் ஆட்​சி​யரிடம் புகார் அளித்​தார்.

அதில் தனக்கு சொந்​த​மான 66 சென்ட் விவசாய நிலத்​தில், சுமார் 60 நாட்​களாக வளர்ந்து வந்த நெற்​பயிர்​கள் மர்ம நபர்​களால் விஷ மருந்து தெளித்து அழிக்​கப்​பட்​ட​தாக தெரி​வித்​துள்​ளார். இத​னால் வாழ்​வாதா​ரம் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாகவும் குற்​றஞ்​சாட்​டினார்.

பிரேமலதாவின் கணவர் சுப்​பிரமணி கடந்த 1989-ம் ஆண்டு உயி​ரிழந்த நிலை​யில், ஆள்மாறாட்டம் செய்து கே.முருகன் மற்​றும் அவரது மகன் வழக்​கறிஞர் நாக​ராஜ் ஆகியோ​ருக்கு விற்​பனை செய்​யப்​பட்​ட​தாகவும், நீதி​மன்​றத்​தில் வழக்கு நிலுவை​யில் இருக்​கும்​போதே இந்​தப் பரிவர்த்​தனைகள் நடை​பெற்​றதாகவும் பிரேமலதா தரப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் முருகன், அவரது மகன் நாக​ராஜ் உள்​ளிட்​டோர் கொண்ட குழு​வினர் விஷ மருந்து தெளித்து 66 சென்ட் நிலத்​தில் பயி​ரிடப்​பட்​டிருந்த நெற்​பயிர்​களை முற்​றி​லும் அழித்​த​தாக பிரேமலதா குற்​றம்​சாட்​டியுள்​ளார். இந்த மூதாட்டியின் நிலப் பிரச்​சினைக்கு உரிய விசா​ரணை நடத்தி, நட​வடிக்கை எடுப்​ப​தாக ஆட்சி​யர் உறுதி​யளித்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT