கோவை ராமநாதபுரம் சந்திப்பிலிருந்து புலியகுளம் நோக்கி திரும்பும் வழித்தடத்திலுள்ள பெட்ரோல் பங்க்கில் நுழைந்து நிற்கும் அரசுப் பேருந்து. படம்: ஜெ.மனோகரன்

 
க்ரைம்

கோவை: பெட்ரோல் பங்க்-கில் புகுந்த அரசு பேருந்து மோதி பெண் காயம்

தனியார் பேருந்துடன் போட்டியால் விபரீதம்

செய்திப்பிரிவு

கோவை: கோவை சிவானந்தா காலனி செல்லும் 5-ம் எண் வழித்தட அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேற்று திருச்சி சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தன.

சுங்கம் சந்திப்பிலிருந்தே இப்பேருந்துகளின் ஓட்டுநர்கள் ஒருவரை ஒருவர் முந்தும் நோக்கத்தில் வேகமாக பேருந்தை ஓட்டி வந்தனர்.

ராமநாதபுரம் சந்திப்பு அருகே வந்தவுடன் தனியார் பேருந்துக்கு முன்பாக, அந்த சாலையில் திரும்பிவிட திட்டமிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், பேருந்தை அனுமதிக்கப்பட்ட சாலையில் இயக்காமல், அருகேயிருந்த பெட்ரோல் பங்க் வளாகத்தில் நுழைந்து புலியகுளம் சாலையில் திருப்ப முயன்றார்.

அப்போது அங்கு வந்த பெண் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில் அப்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள், அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநர், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, ராமநாதபுரம் போலீஸாரிடமும் புகார் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். இதனால் அப்பகுதியில் நேற்று காலை சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT