க்ரைம்

திருத்தணி | பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - கல்லூரி மாணவர் கைது

செய்திப்பிரிவு

பள்ளிக்கு நடந்துசென்றுகொண் டிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவரை திருத்தணி போலீஸார் நேற்று காலை போக்சோவில் கைது செய்தனர்.

திருத்தணி ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வழக்கம்போல் நான்கு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பைக்கில் பின் தொடர்ந்து சென்றுள்ள அடையாளம் தெரியாத கல்லூரி மாணவர் திடீரென்று பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவி காவல் நிலையத்தில் புகார் செய்தார். திருத்தணி போலீ ஸார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் திருத் தணியை அடுத்த வீரகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி என் பவரின் மகன் மோகன் (21) பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததும், அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருவதும் தெரிந்தது.

இதை தொடர்ந்து கல்லூரி மாணவரை போலீஸார் போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT