முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி; பூண்டி ஏரியில் 4,000 கனஅடி நீர் வெளியேற்றம்

முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி; பூண்டி ஏரியில் 4,000 கனஅடி நீர் வெளியேற்றம்
Updated on
2 min read

புயல் எச்சரிக்கையையொட்டி ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியிலிருந்து 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

புயல் எச்சரிக்கையையொட்டி, சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியில் 21.73 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி. அளவில், தற்போது 3.048 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

ஏரிக்கு தற்போது நீர்வரத்து விநாடிக்கு 100 கன அடியாக மட்டுமே இருக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டது. காலையில் மொத்தமாக 1,394 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதில், உபரிநீராக 1,200 கனஅடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. சென்னை குடிநீர்த் தேவைக்காக 165 கன அடியும், சிப்காட் பயன்பாட்டுக்கு 4 கனஅடியும் நீர் திறந்துவிடப்படுகிறது. இந்த 1,200 கனஅடி நீர் இரவு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் (காலை 6 மணி வரை) ஏரிப் பகுதியில் மழைப்பொழிவு எது வும் இல்லை. இருப்பினும், கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, நீர்பாசனத் துறையினர் ஏரியின் நீர் இருப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி; பூண்டி ஏரியில் 4,000 கனஅடி நீர் வெளியேற்றம்
டிட்வா புயல் தாக்கம்: வயல்கள், குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - டெல்டா மாவட்டங்களின் நிலவரம் என்ன?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவ.29,30 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பேரிடரை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். இதற்காக, 4 ஜே.சி.பி. இயந் திரங்கள், 10 மரம் அறுக்கும் கருவிகள், மண்வெட்டிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. டிட்வா புயல் காரணமாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழைக் கான ஆரஞ்சு எச்சரிக்கையும், ஒரு சில பகுதிகளில் அதிக னமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 4,000 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி, வீதம் உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து உபரிநீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு. கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம். திருக்கண்டலம், ஆத்தூர். பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம். புதுகுப்பம். கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன் பாளையம், மடியூர். சீமாவரம். வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி. மணலி, மணலி புதுநகர் சடை யான்குப்பம். எண்ணூர் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி; பூண்டி ஏரியில் 4,000 கனஅடி நீர் வெளியேற்றம்
டிட்வா புயல் தாக்கம்: சென்னையில் 2-வது நாளாக 47 விமானங்கள் ரத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in