க்ரைம்

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.50 லட்சம் மோசடி முயற்சி: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் கமல்​ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்​டர்​நேஷனல் நிறு​வனத்தை குறி​வைத்​து, தயாரிப்​பாளர் போல் ஆள்​மாறாட்​டம் செய்து ரூ.38.50 லட்​சம் மோசடி செய்ய முயன்ற சைபர் கும்​பல் குறித்​து, மத்​திய குற்​றப்​பிரிவு சைபர் க்ரைம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

சென்​னை, ஆழ்​வார்​பேட்​டையைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்​டர்​நேஷனல் நிறு​வனத்​தில் நிர்​வாகி​யாக பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிறு​வனம், தற்​போது நடிகர் ரஜினி​காந்த் நடிக்​கும் ‘தர்​மன்​ மற்​றும் நடிகர் சிவ​கார்த்​தி​கேயன் நடிக்​கும் ‘சேயோன்’ ஆகிய படங்​களை தயாரித்து வரு​கிறது.

கடந்த 2-ம் தேதி முரளி கிருஷ்ணனின் செல்​போன் எண் மர்ம நபர்​களால் முடக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்​து, புதிய செல்​போன் எண்​ணில் இருந்து அவருக்கு வாட்​ஸ்​-அப் மூலம் குறுஞ்​செய்​தி​கள் வந்​தன.

அந்த எண்​ணில், ராஜ்கமல் நிறு​வனத்​தின் தயாரிப்​பாளரின் முகப்​புப் படம் (டி.பி.) வைக்​கப்​பட்​டிருந்​த​தால், தயாரிப்​பாளரே தகவல் அனுப்​பிய​தாக முரளி கிருஷ்ணன் முதலில் நம்​பி​யுள்​ளார்.

அந்த குறுஞ்​செய்​தி​யில், அவசர தேவைக்​காக ரூ.38.50 லட்​சத்தை குறிப்​பிட்ட வங்கி கணக்​குக்கு உடனடி​யாக அனுப்​பு​மாறு தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. மேலும், ஒரு தனி​யார் நிறு​வனத்​தின் பெயரில் உள்ள வங்கி கணக்கு விவரங்​களும் அனுப்​பப்​பட்​டிருந்​தன.

ஆனால், தகவல் பரி​மாற்​றத்​தில் சந்​தேகம் அடைந்த முரளி கிருஷ்ணன், சம்​பந்​தப்​பட்ட தயாரிப்​பாளரை நேரடி​யாக தொடர்​பு​கொண்டு உறுதி செய்​த​போது, இது திட்​ட​மிட்ட சைபர் மோசடி என்​பது தெரிய​வந்​தது. இதனால் பணத்தை அனுப்​பாமல் அவர் தப்​பித்​தார்.

இதுகுறித்​து, அவர் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​தார். அதனுடன், மோசடி வாட்​ஸ்​-அப் செய்​தி​களின் ‘ஸ்​கிரீன்​ஷாட்' மற்​றும் தொடர்​புடைய ஆதா​ரங்​களை​யும் போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தார்.

மோசடி​யில் பயன்​படுத்​தப்​பட்ட செல்​போன் எண் மற்​றும் வங்கி கணக்கை கண்​டறிந்து நடவடிக்கை எடுக்​க​வும் கோரிக்கை விடுத்​தார். இந்த புகாரின் அடிப்​படை​யில், சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT