க்ரைம்

கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம்: தகாத முறையில் நடந்து கொண்டதே தகராறு ஏற்பட காரணம் என இளைஞர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: கார் ஏற்றி இளம்​பெண் கொலை செய்​யப்​பட்ட விவ​காரத்​தில், சொகுசு காரில் வந்த கும்​பல் பாரில் பெண்களிடம் தகாத முறை​யில் நடந்து கொண்​டதே தகராறு ஏற்பட காரணம் என, உடன் சென்ற இளைஞர் தெரி​வித்​துள்​ளார்.

விழுப்​புரம் மாவட்​டம், அனிச்​சங்​குப்​பத்​தில் உள்ள இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமில் வசித்​தவர் யான்சி (19). இந்​நிலை​யில், சமூக வலை​தளம் மூலம் நட்​பான தோழியை பார்க்க, 10 நாட்​களுக்கு முன்​னர் சென்​னை, ராமாபுரம் வந்​தார்.

பின்​னர், தனது 17 வயது தோழி உள்​பட, மேலும் சிலருடன் கடந்த சனிக்​கிழமை இரவு கோயம்​பேட்​டில் உள்ள நட்​சத்​திர ஓட்​டல் மது​பாருக்​குச் சென்​றார். அங்கு சொகுசு காரில் வந்த இளைஞர்​களுக்​கும், யான்​சிக்​கும் இடையே நடனம் ஆடு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது.

இந்த ஆத்​திரத்​தில் காரில் வந்த இளைஞர்​கள், யான்சி சென்ற ஸ்கூட்டி மீது மோதினர். இதில், யான்சி சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

இந்த கொலை தொடர்​பாக, அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த பால​குரு (21), சூளைமேட்​டைச் சேர்ந்த ஜோஷ்வா (19), விரு​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்த சுமந்த் சக்​திவேல் (21) உள்பட 7 பேரை கோயம்​பேடு பேருந்து நிலைய போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்​நிலை​யில், கொலை நடந்​ததற்​கான காரணம் என்ன என்​பது குறித்​து, யான்சி உடன் சென்ற அஸ்​ரத் என்ற இளைஞர் வீடியோ வெளி​யிட்​டுள்​ளார். அதில், அவர் கூறிய​தாவது: கோயம்​பேட்​டில் உள்ள ஒரு மது பாருக்கு நண்​பருடன் சென்​றேன்.

அங்கு யான்​சி, அவரது 17 வயது தோழி​யுடன் வந்​தார். இதையடுத்​து, நாங்​கள் 4 பேரும் மது​பாருக்​குள் சென்று மது அருந்​தினோம். பின்​னர், யான்சி மேடை​யில் நடன​மாடி​னார்.

அப்​போது, அங்கு சொகுசு காரில் வந்த கும்​பல் யான்​சி​யின் இடுப்பை கிள்​ளியதுடன், தங்​களோடு வரு​மாறும் வற்​புறுத்​தி​யது. இதுகுறித்​து, யான்சி என்​னிடம் கூறி​னார். நான் உடனடி​யாக, அந்த கும்​பலிடம் பெண்​களை தொந்​தரவு செய்​யாமல் தள்ளி நின்று ஆடு​மாறு கூறினேன்.

இதனால், கோபமடைந்த அந்த கும்​பல் என்​னிடம் தகராறு செய்​தது. உடனே பவுன்​சர்​கள் தலை​யிட்​டு, எங்​களை வெளியே அனுப்பி வைத்​தனர்.

ஆனால், அந்​தக் கும்​பல் மது​பாரில் இருந்த மேலும் சில பெண்​களிடம் இதே​போல் எல்லை மீறி உள்​ள​னார். இதனால், அவர்​களுக்​கும், அந்த கும்​பலுக்​கும் இடையே தகராறு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, காரில் வந்​தவர்​கள் வலுக்​கட்​டாய​மாக வெளி​யேற்​றப்​பட்​டனர். வெளியே வந்த அவர்​கள் எங்​களிடம் மீண்​டும் தகராறில் ஈடு​பட்​டனர். எங்​களிடம் ஒரே ஒரு ஸ்கூட்டி மட்​டுமே இருந்​த​தால், நண்​பர் ஸ்கூட்​டியை ஓட்ட, யான்​சி, 17 வயது மற்​றும் நான் அதில் சென்​றோம்.

கோயம்​பேடு மேம்​பாலத்தை கடக்​கும்​போது, பாரில் தகராறு செய்த மற்​றொரு பிரி​வினர், சொகுசு கார் மீது கற்​களை வீசி விட்டு தப்​பினர். ஆனால், கல்லை வீசி​யது நாங்​கள்​தான் என தவறு​தலாக நினைத்​து, சொகுசு காரில் வந்த கும்​பல் எங்​கள் மீது காரால் மோதினர்.

இதில், யான்சி சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். இவ்​வாறு அந்த வீடியோ​வில் அஸ்​ரத் தெரி​வித்​துள்​ளார். இதற்​கிடையே, தவெக பிர​முக​ரான தொழில் அதிபர் நடத்தி வந்த சம்​மந்​தப்​பட்ட மது​பாரின் உரிமம் தற்​காலிக​மாக ரத்து செய்​யப்​பட்​டு, சீல் வைக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT