மதுரை: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கத்துக்கு அலங்காநல்லூர் அருகிலுள்ள கல்லணை கிராமத்தில் வாக்குச் சேகரிக்கப்பட்டது.
அப்போது அதிமுககிளைச் செயலாளர் இருளாண்டியின் மகன் அறிவழகன் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தேர்தல் நடத்தை விதியை மீறி பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அறிவழகன் மீது அலங்கா நல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.