சென்னை: சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று, நொளம்பூர் பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், திமுக முன்னாள் கவுன்சிலர் நீலகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை மிரட்டி பணம் கேட்பதாகவும், இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நொளம்பூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் அவர்கள் 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.