க்ரைம்

கிண்டி ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதி விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

செய்திப்பிரிவு

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சுற்​றுச்​சுவரில் கார் மோதிய விபத்​தில் கல்​லூரி மாணவர் உள்பட 5 பேர் காயம் அடைந்​தனர்.

சென்னை மேற்கு மாம்​பலத்தை சேர்ந்​தவர் பால ஆகாஷ் (20). இவர் ராமாபுரத்​தில் உள்ள தனி​யார் கல்​லூரி​யில் பி.டெக். இறுதி ஆண்டு படித்து வரு​கிறார். இவரது நண்​பர்​கள் ஜான், கவுஷிக், ராகவ், ராதி​கா. இவர்​கள் 5 பேரும் நேற்று முன்​தினம் நள்​ளிரவு ஈசிஆர் கடற்​கரை பகு​திக்கு காரில் செல்ல முடிவு செய்​தனர். மறு​நாள் அதி​காலை​யில் சூரிய உதயத்தை பார்த்​து​விட்டு திரும்ப திட்​ட​மிட்​ட​தாக கூறப்​படு​கிறது.

இதையடுத்து நள்​ளிரவு 12.45 மணி​யள​வில் பால ஆகாஷ் காரை ஓட்​டிச் சென்​றார். சைதாப்​பேட்டை தாலுகா அலு​வலக சாலை வழி​யாக கிண்டி சர்​தார் வல்​லப​பாய் படேல் சாலையை நோக்கி சென்​றனர். கார் ஆளுநர் மாளிகை பிர​தான நுழைவு​வா​யில் அருகே சென்​ற​போது, திடீரென கட்​டுப்​பாட்டை இழந்​தது.

வேக​மாக சென்ற கார் சாலையில் வைக்​கப்​பட்​டிருந்த தடுப்​பு​களை இடித்து தள்​ளி​விட்​டு, அங்​கிருந்த ஆளுநர் மாளிகை சுற்​றுச்​சுவரில் பயங்​கர​மாக மோதி நின்​றது. மோதிய வேகத்​தில் காரின் முன்​பகுதி பலத்த சேதம் அடைந்​தது. ஆளுநர் மாளிகை சுற்​றுச்​சுவரிலும் சேதம் ஏற்​பட்​டது.

இதைக் கண்டு ஆளுநர் மாளிகை பாது​காப்​புப் பணி​யில் இருந்த போலீ​ஸார் அதிர்ச்சி அடைந்​தனர். உடனடி​யாக அவர்​கள் விபத்​தில் சிக்​கிய​வர்​களை மீட்​டனர். இந்த விபத்​தில் பால ஆகாஷ் மற்​றும் அவரது நண்​பர்​கள் கவுஷிக், ஜான் ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்​பட்​டது.

அவர்​களை ஆம்​புலன்ஸ் மூலம் சைதாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மற்ற 2 பேருக்கு உள்​கா​யங்​கள் ஏற்​பட்​டது.

இதுகுறித்து தகவல் கிடைத்​ததும் அடை​யாறு போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்​றனர்.

விபத்​தில் சிக்​கிய காரை அப்​புறப்​படுத்​தி, போக்​கு​வரத்தை சீரமைத்​தனர். மேலும், விபத்து தொடர்​பாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

கார் அதிவேக​மாக ஓட்​டப்​பட்​ட​தா? அல்​லது திடீரென கட்​டுப்​பாட்டை இழந்​ததற்​கான வேறு காரணம் ஏதேனும் உள்​ள​தா? என்​பது குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT