கோப்புப் படம்

 
க்ரைம்

சென்னை | ரூ.63 லட்சம் தங்க மோசடி வழக்கில் கைதானவரின் வீட்டிலிருந்து ரூ.500 டம்மி நோட்டு கட்டுகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: ரூ.63 லட்​சம் தங்க மோசடி வழக்​கில் புதிய திருப்​ப​மாக கைதானவரின் வீட்​டிலிருந்து ரூ.500 டம்மி நோட்டு கட்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. சென்னை அமைந்​தகரையைச் சேர்ந்த தங்க மொத்த வியா​பாரி அன்​மோல் ஜெயின் (24), தனது உறவினர் நமீத்​துடன் இணைந்து தங்​கத்தை வாங்கி விற்​பனை செய்து வரு​கிறார்.

கடந்த 17-ம் தேதி​யன்​று, எழும்​பூர் பவுண்​டன் பிளா​சா​வில் கடை நடத்தி வரு​வ​தாக​வும், குறைந்த விலைக்கு தங்​கம் விற்​ப​தாக​வும் கூறிய பெரம்​பூரைச் சேர்ந்த சக்​திவேல், அவரது தந்தை சாந்​தகு​மார் ஆகியோரிடம் தங்​கம் வாங்க ரூ.63 லட்​சத்தை வழங்​கி​னார்.

ஆனால், அவர்​கள் தங்​கத்தை தராமல் ஒவ்​வொரு​வ​ராக தலைமறை​வாகினர். இதுகுறித்து அன்​மோல் ஜெயின் எழும்​பூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

இந்த புகாரின் அடிப்​படை​யில், எழும்​பூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, மோசடிக்கு மூளை​யாக செயல்​பட்​ட​தாகக்கூறப்​படும் சக்​திவேல் (23), அவரது தந்தை சாந்​தகு​மார் (61), ​ராம் (23), ராம்​கு​மார் (22), உதயகிரண் (22) ஆகிய 5 பேரை கைது செய்​தனர்.

தொடர்ந்து நடை​பெற்ற விசா​ரணை​யில், சென்னை கொண்​டித்​தோப்​பைச் சேர்ந்த பி.டெக் பட்​ட​தாரி விஷ்வக் (21) என்​பவரும் இந்த மோசடி​யில் தொடர்​புடைய​வர் என தெரிய​வந்​ததைத் தொடர்ந்​து, அவரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

கைது செய்​யப்​பட்​ட​வர்​களிட​மிருந்து இது​வரை ரூ.44.50 லட்​சம் ரொக்​கம் மீட்​கப்​பட்​டுள்​ள​து. நீதி​மன்​றக் காவலில் புழல் சிறையி​லிருந்த சாந்​தகு​மாரை போலீ​ஸார் காவலில் எடுத்து விசா​ரித்​தனர்.

அதன்​பின், பெரம்​பூரில் உள்ள அவரது வீட்​டில் மேற்​கொள்​ளப்​பட்ட சோதனை​யில், ரூ.500 மதிப்​புள்ள டம்மி நோட்​டுக் கட்​டு​கள் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. கள்​ளநோட்​டு​கள் தயாரிப்​பில் பயன்​படுத்​தப்​படும் வகையி​லான இந்த டம்மி நோட்​டு​களை போலீ​ஸார் பறி​முதல் செய்​துள்​ளனர்.

சாந்​தகு​மாருக்கு கள்​ளநோட்டு கும்​பலுடன் தொடர்பு உள்​ள​தா, இந்த டம்மி நோட்​டு​கள் எங்​கிருந்து கிடைத்​தன, இதன் பின்​னணி​யில் வெளி​நாட்டு கும்​பல்​களின் தொடர்பு உள்​ளதா என விசா​ரிக்கின்றனர். இந்த வழக்​கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்​கக்​கூடும் என்ற சந்​தேகத்​தின் பேரில் தொடர்ந்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT