நிரஞ்சன்

 
க்ரைம்

படப்பை அருகே ஓட்டல் வளாகத்தில் சோகம்: நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

படப்பை: ஓட்​டல் வளாகத்​தில் உள்ள நீச்​சல் குளத்​தின் அருகே விளை​யாடிக் கொண்​டிருந்த 4 வயது சிறு​வன், எதிர்​பா​ராத​வித​மாக குளத்​தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயி​ரிழந்​தார்.

படப்பை அருகே வஞ்​சு​வாஞ்​சேரி, கிருஷ்ணர் கோயில் தெரு​வைச் சேர்ந்​தவர் சக்​திவேல். இவரது மகன் நிரஞ்​சன் (4). சக்​திவேல் பண்​ருட்​டி​யில் பஞ்​சர் கடை​யில் வேலை செய்து வருகிறார்.

குழந்தை நிரஞ்​சன் வீட்​டுக்கு அரு​கில் வசித்​து​வரும் தமிழ்​குமரன் என்​பவரது உறவினர் வீட்​டில் நடை​பெற்ற சீமந்த நிகழ்ச்​சிக்​காக கும்​பகோணத்​தில் இருந்து வந்த உறவினர்​கள் படப்பை புஷ்பகிரி பிர​தான சாலை​யில் உள்ள தனி​யார் ஓட்​டலில் தங்​கி​யிருந்​த​தாக கூறப்​படு​கிறது.

அவர்​களைப் பார்ப்​ப​தற்​காக தமிழ்​குமரன் ஓட்​டலுக்கு வந்​த​போது, சிறு​வன் நிரஞ்​சனை​யும் அழைத்து வந்​துள்​ளார். அப்​போது ஓட்​டல் வளாகத்​தில் சிறு​வன் விளை​யாடிக் கொண்​டிருந்​த​தாக கூறப்​படு​கிறது.

நீச்​சல் குளத்​தின் அருகே விளை​யாடிக் கொண்​டிருந்த சிறு​வன், எதிர்​பா​ராத​வித​மாக குளத்​துக்​குள் தவறி விழுந்து நீரில் மூழ்​கி​யுள்​ளார். இதைக் கண்ட உடனிருந்​தவர்​கள் உடனடி​யாக சிறு​வனை மீட்​டு, ஆம்​புலன்ஸ் மூலம் சிகிச்​சைக்​காக தாம்​பரம் அரசு மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றனர். ஆனால் சிறு​வன் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

தகவல் அறிந்த படப்பைகாவல் நிலைய போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சிறு​வன் நீச்​சல் குளத்​தில் தவறிவிழுந்​தது எப்​படி, அப்​போது உடனிருந்​தவர்​கள் யார், நீச்​சல் குளத்​தைச் சுற்றி போதிய பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன​வா, கண்​காணிப்​புப் பணி​யில் ஊழியர்​கள் இருந்​தனரா என்​பது குறித்​தும் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். சுப நிகழ்ச்​சிக்​காக வந்த இடத்​தில் எதிர்​பா​ராத​வித​மாக சிறு​வன் உயி​ரிழந்த சம்​பவம் பெரும் சோகத்​தை ஏற்​படுத்​தியுள்​ளது.

SCROLL FOR NEXT