கோப்புப் படம்

 
க்ரைம்

வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

செய்திப்பிரிவு

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச துணைத் தூதரக அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் மின்னஞ்சல் ஒன்று வந்தது.

உடனே வெடிகுண்டு நிபுணர்களும், போலீஸாரும் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில் அது புரளி என உறுதியானது. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

வங்கதேசத்தில் மாணவர் அமைப்பு தலைவர் கொலை செய்யப்பட்ட பின்னர், கலவரம் வெடித்துள்ள சூழலில், வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT