க்ரைம்

அடையாறு பகுதியில் தலையில் காயங்களுடன் சாக்கு மூட்டையில் வடமாநில இளைஞர் சடலம்

செய்திப்பிரிவு

சென்னை: அடையாறு பகு​தி​யில் சாக்கு மூட்​டை​யில் வடமாநில இளைஞரின் சடலம் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதுகுறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

சென்னை அடை​யார், இந்​திரா நகரில் பிரபல​மான பைக் ஷோரூம் ஒன்று உள்​ளது. இதன் அரு​கில் நேற்று காலை 7.30 மணி​யள​வில் சாக்கு மூட்டை (கோணிப்​பை) ஒன்று கேட்​பாரற்ற நிலை​யில் கிடந்​தது.

          

இதை அப்​பகுதி மக்​கள் அரு​கில் சென்று பார்த்​த​போது அதிலிருந்து ரத்​தம் வடிந்து கொண்​டிருந்​தது. இதுகுறித்து அவர்​கள் உடனடி​யாக போலீ​ஸில் புகார் தெரி​வித்​தனர்.

அடையாறு போலீ​ஸார் வந்து சாக்கு மூட்​டையை அவிழ்த்து பார்த்​த​போது தலை​யில் 3 வெட்​டுக் காயங்​கள் மற்​றும் முகத்​தில் கையால் அடித்த சிறு ரத்​தக் காயத்​துடன் 35 வயதுடைய வட மாநில இளைஞர் ஒரு​வரின் சடலம் அதில் இருந்​தது.

அதை ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு பரிசோதனைக்​காக அனுப்பி வைத்​தனர். கொலை செய்​யப்​பட்ட இளைஞர்யார், எந்த பகு​தி​யைச் சேர்ந்​தவர், எதற்​காக எங்கு கொலை நடந்​தது, கொலை​யாளி​கள் யார் என போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

முதற்​கட்​ட​மாக சம்பவ இடம், அதைச் சுற்றி பொருத்​தப்​பட்​டுள்ள சிசிடிவி கேமரா பதிவு​களை கைப்​பற்றி போலீ​ஸார் ஆய்வு செய்து வரு​கின்​றனர். தனிப்​படை​யும்​ அமைக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT