க்ரைம்

சென்னை | மின்சார ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிஹார் இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கும்​மிடிப்​பூண்​டி​யில் இருந்து சென்னை வந்த மின்​சார ரயிலில் பெண்​ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, பிஹார் இளைஞரை ரயில்வே போலீ​ஸார் கைது செய்​தனர்.

கும்​மிடிப்​பூண்​டி​யில் இருந்து சென்னை சென்ட்​ரல் நோக்கி மின்​சார ரயில் ஒன்று கடந்த 26-ம் தேதி இரவு புறப்​பட்டு மீஞ்​சூர் நிலை​யத்தை வந்​தடைந்த போது, அதில் மீஞ்​சூரை சேர்ந்த ஒரு பெண் ஏறி​னார்.

அந்த பெண், பேசின்​பாலத்​தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இரவு வேலைக்கு செல்​வதற்​காக மின்​சார ரயி​லில் பயணித்​தார்.

இந்​நிலை​யில், ரயில் கத்​திவாக்​கம் நிலை​யத்தை வந்​தபோது, அதில் ஒரு மர்​ம நபர் ஏறி, தனி​யாக இருந்த அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்​தார். அந்த வாலிபரை, அப்​பெண் தடுத்​தபோது, அவரின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்​கி​விட்டு தப்​பி​னார்.

இது குறித்​து, கொருக்​குப்​பேட்டை ரயில்வே போலீசில் அப்​பெண் புகார் கொடுத்​தார். புகாரின் பேரில், ரயில்வே போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, சிசிடிவி காட்​சிகளில் பதி​வான காட்​சியை வைத்​து விசாரணை நடத்தினர்.

இதற்​கிடையே, கொருக்​குப்​பேட்டை ரயில் நிலை​யத்​தில் 4-வது நடைமேடை​யில் சந்​தேகத்​தின் பேரில் நின்று கொண்​டிருந்த நபரை பிடித்து விசா​ரித்​த​போது, அந்த நபர் மீஞ்​சூரை சேர்ந்த பெண்​ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்​தது தெரிய வந்​தது.

இதையடுத்​து, அந்த நபரை பிடித்து விசா​ரித்த போது, அந்த நபர், பிஹார் மாநிலம், மேற்கு சம்ப்​ரான் மாவட்​டத்தை சேர்ந்த தினேஷ் குமார் மாஜி (22) என்​பதும், தடாபகு​தி​யில் பிளைவுட் நிறு​வனத்​தில் வேலைப் பார்த்து வந்​ததும் தெரிய வந்​தது. இதையடுத்​து, அவரை கைது செய்​து, சிறை​யில் அடைத்​தனர்.

SCROLL FOR NEXT