காரில் தொங்கியபடி செல்லும் காவலரின் சிசிடிவி காட்சி. (அடுத்த படம்) கைதான யாரப் பாஷா மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் குட்கா மூட்டைகள்.

 
க்ரைம்

ஓசூரில் வாகன சோதனையின்போது காரை ஏற்றி காவலரை கொல்ல முயற்சி

4 கி.மீ. தொங்கியபடி சென்று தப்பினார்

செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூரில் வாக​னத் தணிக்​கை​யின்​போது, காரை ஏற்​றிக் கொல்ல முயன்ற நிலை​யில் காரின் முன்​பகு​தி​யில் தொங்​கியபடி 4 கி.மீ. தூரம் சென்ற தலைமை காவலரை போலீ​ஸார் மீட்​டனர். காரில் குட்கா கடத்​தி​ய​வரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் ஜூஜு​வாடி சோதனைச் சாவடி​யில் சிப்​காட் போலீ​ஸார் நேற்று மதி​யம் 3.30 மணி​யள​வில் வாகன சோதனையில் ஈடு​பட்​டிருந்​தனர்.

          

அப்​போது, கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​விலிருந்து வந்த காரை நிறுத்​த முயன்றனர். ஆனால், கார் நிற்​காமல் தலைமை காவலர் ராஜீவ் காந்தி என்​பவர் மீது மோதி​யதோடு, அதிவேகத்​தில் சென்​றது.

இதில், காரின் பேனட்​டில் ராஜீவ் காந்தி விழுந்த நிலை​யில், முன்​பகு​தியை பிடித்​துக் கொண்டு தொங்​கியபடி சென்​றார். அப்​போதும், ஓட்​டுநர் காரை நிறுத்​த​வில்​லை.

இதையடுத்​து, காவல் ஆய்​வாளர் சையத் முபாரக் தலை​மையி​லான போலீ​ஸார், அந்த காரை துரத்​திச் சென்​றதோடு, 4 கி.மீ. தூரத்​தில் உள்ள தர்கா பகு​தி​யில் பொது​மக்​களின் உதவி​யுடன் காரை மடக்​கிப் பிடித்​து, ராஜீவ் காந்​தியை மீட்​டனர்.

இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது. உடனடி​யாக அவர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்கு சேர்க்​கப்​பட்​டார். தொடர்ந்து காரை ஓட்டிய ஓசூர் காளேகுண்டா பகு​தி​யைச் சேர்ந்த யாரப் பாஷா என்​பவரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

மேலும், காரில் கடத்த முயன்ற 390 கிலோ குட்​கா, கர்​நாடகா மது​பாட்​டில்​கள் 48 மற்​றும் காரை பறி​முதல் செய்​தனர். மக்​கள் நடமாட்​டம் அதிக உள்ள தேசிய நெடுஞ்​சாலை​யில் நடந்த இச்​சம்​பவம்​ பொது​மக்​களிடையே அதிர்ச்சி​யை ஏற்படுத்​தியுள்​ளது.

SCROLL FOR NEXT