மாதிரிப் படம்
கோவை: கோவை பி.கே.புதூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், தனியார் வங்கி மூலம் கோவையில் பராமரிக்கப்படும் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் பணி மேற் கொண்டுவருகிறார். இவரிடம், திருச்சி மேல அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் பிச்சமுத்து என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பணத்தை ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பிவிட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி ஏடிஎம்மில் நிரபப் ரூ.10 லட்சத்து 20 ஆயிரத்துடன் சென்றவர் தலைமறைவானார். இது குறித்து ராஜ்குமார், குனியமுத்தூர் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின்கீழ் கதிர்வேல் பிச்சைமுத்து, அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து ஐஸ்வர்யாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கதிர்வேல் பிச்சைமுத்துவை தேடி வருகின்றனர்.