க்ரைம்

புகார் அளித்த பெண் ஐ.டி ஊழியரை தனிமைக்கு அழைத்த உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: புகார் அளித்த பெண் ஐ.டி ஊழியரை தனிமைக்கு அழைத்த காவல் உதவி ஆணை​யர், காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார்.

சென்னை தி.நகர் காவல் மாவட்​டத்​துக்கு உட்​பட்ட பகு​தி​யைச் சேர்ந்த, கனடா​வில் பணி​யாற்​றும் ஐ.டி. இளம்​பெண் ஊழியர் ஒரு​வர், இதே​போன்ற ஐடி பணி​யில் இருக்​கும் சென்​னையைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்​துள்​ளார். இரு​வரும் சென்னை வந்​த​போது நெருங்​கிப் பழகினர்.

திரு​மணம் செய்​து​கொள்ள தயா​ரான நிலை​யில், காதலனுக்கு ஏற்​கெனவே திரு​மண​மான தகவல் அப்​பெண்​ணுக்கு தெரிய​வந்​தது. அதிர்ச்சி அடைந்த அந்​தப் பெண், தன்னை ஏமாற்​றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி விரு​கம்​பாக்​கம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

உதவி ஆய்​வாளர் பெனாசீர் பேகம் விசா​ரணை நடத்​தி​னார். அப்​பெண்​ணுக்கு நியா​யம் கிடைக்க உறுதி அளித்​ததுடன், பல லட்​சம் ரூபாய் மதிப்​புள்ள ஆடம்​பரப் பொருட்​கள், வீட்டு உபயோகப் பொருட்​களை ஆன்​லைன் வாயி​லாக பெற்று அதற்​கான கட்​ட​ணத்தை அப்​பெண்ணை செலுத்​தும்​படி செய்​தார்.

இதே​போன்​று, சம்​பந்​தப்​பட்ட இளைஞரிட​மும் வழக்​கில் இருந்து விடு​விப்​ப​தாகக் கூறி ஆன்​லைன் வாயி​லாக பொருட்​களை பெற்​றுக் கொண்​டார். இதையடுத்​து, பெண் உதவி ஆய்​வாளரின் உதவி​யால், அந்த இளைஞர் ஜாமீன் பெற்று கனடா தப்​பிச் சென்று விட்​டார்.

இதையறிந்து அதிர்ச்​சி​யடைந்த அப்​பெண், இதுகுறி்த்து சென்னை மேற்கு மண்டல இணை ஆணை​யர் திஷா மிட்​டலிடம் முறை​யிட்​டார். அவர் விரு​கம்​பாக்​கம் சரக உதவி ஆணை​யர் பால​கிருஷ்ண பிரபு​விடம் விசா​ரிக்க உத்​தர​விட்​டார்.

பால​கிருஷ்ண பிரபுவோ விசா​ரணை என்ற பெயரில் புகார் அளித்த பெண்​ணிடம் வாட்​ஸ்​அப் காலில் தொடர்ந்து பேச ஆரம்​பித்​தார். தனிமை​யில் இருக்க அழைத்​த​தாக​வும் கூறப்​படு​கிறது. மேலும் ஆன்​லைன் மூல​மாக பொருட்​கள் பெற்ற உதவி ஆய்​வாளர் பெனாசீர் பேகம் மீதும் நடவடிக்கை எடுக்​க​வில்​லை.

உதவி ஆணை​யரின் செயல் எல்லை மீறிய​தால், இணை ஆணை​யரிடம் இதுதொடர்​பாக அப்​பெண் முறை​யிட்​டதுடன், வாட்​ஸ்​அப் தகவல்​களை​யும் அளித்​தார்.

இதுகுறித்து புகாருக்​குள்​ளான உதவி ஆணை​யர் பால​கிருஷ்ண பிரபு மற்​றும் உதவி ஆய்​வாளர் பெனாசீர் பேகம் இரு​வரை​யும் காத்​திருப்​போர் பட்​டியலுக்கு இணை ஆணை​யர் மாற்​றி​னார். இது தொடர்​பாக விசா​ரணை நடைபெறுகிறது.

ஆய்​வாளர் மீது நடவடிக்கை: கோயம்​பேடு மகளிர் காவல் நிலைய ஆய்​வாள​ர் தாஹி​ரா​விடம் இளம்​பெண் ஒரு​வர் அளித்த புகாரில், ‘நான் காதல​னால் ஏமாற்​றப்​பட்டு கர்ப்​பமடைந்து விட்​டேன். தற்​போது அவர் என்னை திரு​மணம் செய்து கொள்ள மறுக்​கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என தெரி​வித்து இருந்​தார்.

இதுகுறித்​து, விசா​ரணை நடத்​து​வ​தாக கூறிய தாஹி​ரா, அவரிடம் இருந்து ரூ.1,500-ஐ வாங்​கிக்​கொண்டு அனுப்பி வைத்​துள்​ளார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்​க​வில்​லை. இளம்​பெண், மேற்​குமண்டல இணை ஆணை​யர் திஷா மிட்​டலிடம் அளித்த புகாரின் அடிப்படையில் தாஹி​ரா காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT