க்ரைம்

சென்னை | பிஹார் சிறுமி பாலியல் வன்கொடுமை: அசாம் மாநில இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: நீலாங்​கரை​யில் பிஹார் சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் அசாம் இளைஞர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்த 16 வயது சிறுமி 6 மாதங்​களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்​துள்​ளார். அவர், சென்னை நீலாங்​கரை​யில் தங்​கி​யிருந்​து, அங்​குள்ள தனி​யார் நிறு​வனத்​தில் வேலை செய்து வந்​தார்.

          

அப்​போது, அங்கு பணி​யாற்றி வந்த அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த ரூபன் (19) என்​பவருடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. சமீபத்​தில், கொட்​டி​வாக்​கத்​தில் உள்ள தனது வீட்​டுக்கு சிறுமியை அழைத்​துச் சென்ற ரூபன், அவரை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக கூறப்​படு​கிறது.

இந்த நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன்பு அதே நிறு​வனத்​தில் பணிபுரி​யும் ரூபனின் நண்​ப​ரான நாகாலாந்​தைச் சேர்ந்த ஆலன் உசேன் (19) என்​பவரும் சிறுமியை வன்​கொடுமை செய்​துள்​ளார்.

அது தொடர்​பான வீடியோவை சமூக வலை​தளங்​களில் வெளி​யிடப்​போவ​தாக இரு​வரும் சிறுமியை மிரட்​டி​யுள்​ளனர். இதில் பயந்​து​போன சிறுமி, நீலாங்​கரை மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் கொடுத்​தார்.

அதன் அடிப்​படை​யில் போக்சோ சட்​டத்​தின்​கீழ் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, ரூபனை கைது செய்​தனர். தலைமறை​வான ஆலன் உசேனை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT