சென்னை: ஏழைச் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டார்.
அவர் மீது 20-க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்தனர். ஏற்கெனவே ஜெம் வீரமணி மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போதுமேலும் ஒரு வழக்கு ஆறாவதாக நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளின் வாக்கு மூலத்தின் மீது ஒரே வழக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி வீட்டில் போலீஸார் நேற்று மீண்டும் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.