க்ரைம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மதுக்கூடத்தில் இலவசமாக மது கேட்டு தகராறு: நாட்டு வெடிகுண்டு வீசிய 2 பேர் கைது

செய்திப்பிரிவு

வத்திராயிருப்பு: ஸ்ரீ​வில்​லிபுத்​தூர் அருகே வத்​தி​ரா​யிருப்பு கூமாபட்டி தனி​யார் பாரில் இலவச​மாக மது கேட்டு தகராறில் ஈடு​பட்​டு, நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி உள்பட இரு​வரை போலீ​ஸார் கைது செய்தனர்.

வத்​தி​ரா​யிருப்பு அருகே கூமாபட்​டி-நெடுங்​குளம் சாலை​யில் எஸ்​.​கொடிக்​குளத்​தைச் சேர்ந்த சந்​திரன் என்​பவர் அரசு உரிமம் பெற்று தனி​யார் பார் நடத்தி வரு​கிறார். நேற்று முன்​தினம் காலை 10.50 மணிக்கு பாருக்கு வந்த கூமாபட்​டியைச் சேர்ந்த ரமணி (44), ராம​சாமி​யாபுரத்தை சேர்ந்த ராஜா (45), ஆத்​தங்​கரைபட்​டியை சேர்ந்த வீரய்யா (50) ஆகியோர் மது பாட்​டில் கேட்​டுள்​ளனர். அங்கு வேலை பார்க்​கும் மாயன் 11 மணிக்​குத்​தான் கடை திறக்​கப்​படும், கிளப் உறுப்​பினர்​களுக்கு மட்​டுமே மது விற்​பனை செய்​யப்​படும் எனக் கூறி உள்​ளார்.

பின்னர் கடைக்கு வந்த ரமணி மதுவை வாங்​கி​விட்டு பணம் தராமல் தகராறில் ஈடு​பட்டு மிரட்​டிச் சென்​றுள்​ளார். பிற்​பகல் 1 மணிக்கு மீண்​டும் பாருக்கு வந்த 3 பேரும் இலவச​மாக மது கேட்டு தகராறில் ஈடு​பட்​டுள்​ளனர். விற்​பனை​யாளர் தர மறுத்​ததும், வன விலங்​குகளை வேட்​டை​யாட பயன்படுத்​தும் 3 நாட்டு வெடிகுண்​டு​களை ரமணி வீசி உள்ளார். 3 வெடிகுண்​டு​களும் வெடித்த​தில், பார் விற்​பனை​யாளர் மாயன்லேசான காயமடைந்தார். இதுகுறித்தபுகாரின்பேரில் வழக்குப் ப​திவு செய்த கூமாபட்டி போலீ​ஸார் சிசிடிவி காட்​சிகளை ஆய்வு செய்து ரமணி, ராஜாவை கைது செய்தனர். வீரய்​யாவை தேடி வரு​கின்​றனர்.

கைதான ரமணி மீது கொலை வழக்கு உள்பட 20-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் கூமாபட்டி காவல் நிலை​யத்​தில் நிலு​வை​யில் உள்​ள​தாக​வும், ரவுடி பட்​டியலில் இடம்​பெற்றுள்​ள​தாக​வும் போலீ​ஸார் தெரி​வித்​தனர். அவருக்கு நாட்டு வெடிகுண்டு எங்​கிருந்து கிடைத்​தது, மேற்​குத் தொடர்ச்சி மலை​யடி​வார பகு​தி​களில் வெடிகுண்டு வைத்து வேட்​டை​யாடு​தல் நடக்​கிறதா என்ற கோணத்​தில் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT