க்ரைம்

துபாயில் ரூ.46 லட்சம் கையாடல் செய்து சென்னை வந்த ஏஜென்சி ஊழியரை கடத்தி தாக்குதல்: ஏஜென்சி உரிமையாளர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கை​யாடல் பணத்​துடன், தோழி​யை அழைத்துக்கொண்டு துபாயி​லிருந்து தப்பி சென்னை வந்த ஏஜென்சி ஊழியர் கடத்தி தாக்​கப்​பட்ட சம்​பவத்​தில், ஏஜென்சி உரிமை​யாளர் உட்பட 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

திருச்சி மாவட்​டம் சுப்​பிரமணி​யபுரத்​தைச் சேர்ந்​தவர் சரத்​கு​மார்​(29). துபா​யில், ஜெயமோகன் என்​பவர் நடத்​திவரும் மேன் பவர் ஏஜென்சி நிறு​வனத்​தில் கணக்​காள​ராகப் பணி​யாற்றி வந்​தார். இவருக்கு கடந்த 6 மாதங்​களாக சம்​பளம் வழங்​க​வில்லை எனக் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் கடந்த 26-ம் தேதி சரத்​கு​மார், தனது தோழி ஒரு​வருடன் விமானம் மூலம் சென்னை திரும்​பி​னார். விமான நிலை​யத்​துக்கு தனது உறவினர் அருண்​பாண்​டியனுடன் வந்த ஜெயமோகன், சரத்​கு​மார் மற்​றும் அவரது தோழியை மடக்கி பிடித்து இரு​வரை​யும் வலுக்​கட்​டாய​மாக காரில் ஏற்றி கடத்த முயன்​றார்.

இதைக் கண்டு அங்​கிருந்​தவர்​கள் உடனடி​யாக போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். விரைந்து வந்த பரங்​கிமலை போலீ​ஸார் 4 பேரை​யும் காவல் நிலை​யம் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர். அப்​போது, சரத்​கு​மார், தான் பணி செய்த நிறு​வனத்​தின் வங்​கிக் கணக்​கில் இருந்து ரூ.46 லட்​சத்தை கையாடல் செய்து தப்​பியது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, இரு தரப்​பினரும் இந்த பிரச்​சினையை பேசி தீர்த்​துக் கொள்​வ​தாக தெரி​வித்து வெளி​யேறினர். காவல் நிலை​யத்​திலிருந்து வெளியே வந்​தவுடன் ஜெயமோக​னும் அருண்​பாண்​டியனும் சேர்ந்து சரத்​கு​மார் மற்​றும் அவரது தோழியை காரில் கடத்தி சாலிகி​ராமம் தனலட்​சுமி காலனி பகு​தி​யில் உள்ள விடு​தி​யில் அடைத்து வைத்​து, கையாடல் செய்த பணத்தை கேட்டு தாக்​கினர்.

இதையறிந்த சரத்​கு​மாரின் அண்​ணன் சரவணகு​மார், இதுதொடர்​பாக காவல் கட்​டுப்​பாட்டு அறை​யில் புகார் தெரி​வித்​தார். விரு​கம்​பாக்​கம் போலீ​ஸார் விரைந்து சென்று சரத்​கு​மாரை​யும், அவரது தோழியை​யும் மீட்​டனர். ஜெயமோக​னை​யும், அவரது நண்​பரை​யும் போலீ​ஸார் கைது செய்து தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT