க்ரைம்

சென்னை | புகார் அளிக்கச் சென்றவர் கைது: காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வடபழனி குமரன் காலனி​யில் உள்ள 1,800 சதுர அடி நிலத்​துக்கு போலி ஆவணங்​கள் தயாரித்து நில மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக எஸ்.சூர்யா என்​பவர் அளித்த புகாரின்​பேரி்ல் வடபழனியைச் சேர்ந்த பால்​துரை உள்​ளிட்ட 3 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​திருந்​தனர்.

இந்த வழக்​கில் பால்​துரை தனக்கு முன்​ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி என். ரமேஷ், குற்​றம் சாட்​டப்​பட்ட பால்​துரை மீதான புகாரை விசா​ரித்து, அறிக்கை தாக்​கல் செய்ய விருகம்​பாக்​கம் காவல் ஆய்​வாள​ருக்கு உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில் முன்​ஜாமீன் மனு மீதான விசா​ரணை நீதிபதி என்.ரமேஷ் முன்​பாக மீண்​டும் விசா​ரணைக்கு வந்​த​போது, பால்​துரைக்கு எதிரான புகாரை வாபஸ் பெறும்​படி புகார்​தா​ரரான சூர்​யாவை விருகம்​பாக்​கம் காவல் ஆய்​வாளர் மிரட்​டிய​தாகவும், அதையேற்​காத சூர்யா மீது பால்​துரை மனைவி அளித்த புகாரின் பேரில் வன்​கொடுமை தடுப்​புச்​சட்​டத்​தின் கீழ் பொய் வழக்​குப்​ப​திந்து சூர்​யாவை கைது செய்​த​தாகவும் தெரி​விக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் முன்​ஜாமீன் கோரி பால்​துரை தாக்​கல் செய்​திருந்த மனுவை தள்​ளு​படி செய்த நீதிபதி, நிலமோசடி குறித்து புகார் அளித்த புகார்​தா​ரர் மீதே பொய் வழக்​குப்​ப​திவு செய்த விருகம்​பாக்​கம் காவல் ஆய்​வாளர்​களான முனிசேகர் மற்​றும் ராஜேஷ் ஆகியோர் மீது துறைரீதி​யாக ஒழுங்கு நட​வடிக்கை எடுக்க வேண்டு​மென மாநகர காவல் ஆணை​யருக்கு உத்​தர​விட்​டு உள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT