

கோப்புப் படம்
சென்னை: தொடக்கக்கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கேக் வழங்கப்பட உள்ளது.
இதையொட்டி விற்பனையாளர்கள் கேக் பார்சல்களை நவம்பர் 10-ம் தேதிக்குள் ஒப்படைப்பர். இதையடுத்து மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளும், மற்றவர்களுக்கு கேக்குகளும் நவம்பர் 13-ம் தேதியன்றே (வெள்ளிக்கிழமை) வழங்க வேண்டும்.
நவம்பர் 14 சனிக்கிழமை என்பதால் முதல் நாளே கேக் விநியோகிக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து அட்டை கிடைத்துள்ளதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.