க்ரைம்

நெல்லையில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: நெல்லையில் மூன்று சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 2023-ம் ஆண்டு 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து ஆனந்த சேகர் என்பவரை கைது செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த சேகருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பு வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT