சென்னை: இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள நாவலூர் குடியிருப்பில் வசித்து வந்த சுரேஷ் (24) மற்றும் கோட்டூர்புரம், சித்ரா நகரில் வசித்து வந்த அருண் (25) ஆகிய இருவரும் கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இக்கொலை தொடர்பாக, கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து கோட்டூர்புரத்தைச் சேர்ந்த மனோஜ் உட்பட 5-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணை சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில் உள்ள 16-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த கரண் தலைமறைவானார். அவரை கைது செய்ய நீதிமன்றம் கடந்த மாதம் 23-ம் தேதி பிடியாணை பிறப்பித்தது.
இந்நிலையில், நங்கநல்லூரில் பதுங்கி இருந்த கரண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.