ஓவியம் வரைவதில் ஏற்பட்ட தகராறில் சக மாணவனை அடித்துக் கொன்ற வழக்கில் கைதான சிறுவன், சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அருவங்காடு சந்து காலனி பகுதியைச் சேர்ந்த வர்கள் முருகானந்தம் - அனு சியா தம்பதியினர். தேயிலை விவசாயிகளான இவர்களுக்கு புகழேஷ் (14) என்ற மகனும். ஒரு மகளும் இருந்தனர்.
புகழேஷ் குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5-ம் தேதி மாலை பள்ளி முடிந்து சக மாணவர்களுடன் குன்னூரை நோக்கி புகழேஷ் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போதுஎதிர் பாராத விதமாக புகழேஷ் திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த சக மாணவர்கள், உடனடியாக அவரை ஆட்டோவில் ஏற்றி குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவனைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தத் தகவலை அறிந்து மருத்துவமனைக்கு வந்த மாண வனின் பெற்றோரும், கிராம மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். புகழேஷின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்களும் ஊர் பொதுமக் களும் குன்னூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு. உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீ ஸார் மற்றும் வருவாய் துறை யினர் சம்பவ இடத்துக்கு வந்து மாணவரின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது. நேற்று முன்தினம் புகழேசின் உடல் பிரேத பரி சோதனை செய்து, பெற்றோ ரிடம் வழங்கப்பட்டது. இந்நிலை யில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவர் தாக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்து மேல் குன்னூர் போலீஸார் விசாரணை நடத்தியதில், கடந்த 5-ம் தேதி புகழேசுடன் படிக்கும், 14 வயது மாணவர் ஒருவர் ஓவியம் வரைந்து கொண்டிருந்த போது. விளையாட்டுத்தனமாக நண்பர்கள் தள்ளி விட்டதால் புகழேஷ் அவர் மீது விழுந்த தாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த அந்த மாணவர் புகழேசை தாக்கி உள்ளார்.
மேலும் பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியிலும் சக நண்பர்களுடன் சேர்ந்து அந்த மாணவர் மீண்டும் புகழேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் புகழேஷ் பரிதாபமாக உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் புகழேஷ் உடன் படிக்கும் சக மாணவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.