சென்னை: ஆலந்தூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று சென்னை மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கார்த்திக்கேயன் என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார்.
மஹாலட்சுமி என்பவர் தூய்மைப் பணியாளராக வேலை செய்ததாக கார்த்திக்கேயன் பதிவேடு தயாரித்து அவருக்கு மாதம் ரூ.19,800 சம்பளம் வழங்கப்பட்டதாகக் கணக்குக் காட்டி, மொத்தம் ரூ.98,930 மஹா லட்சுமியின் மகன் பாண்டியனின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார்.
பாண்டியனும் அதே நிறுவனத்தில் தூய்மை பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கார்த்திக்கேயனை போலீஸார் தேடி வருகின்றனர்.