விஏஓ அரவிந்த், உதவியாளர் ரவி

 
க்ரைம்

ஆவடியில் வாரிசு சான்றிதழ் அளிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம்: விஏஓ, கிராம உதவியாளர் கைது

செய்திப்பிரிவு

ஆவடி: லஞ்​சம் வாங்​கியது தொடர்​பாக கிராம நிர்​வாக அலு​வலர், கிராம உதவி​யாளர் கைது செய்யப்பட்டனர். ஆவடி, காம​ராஜர் நகர் 2-வது தெரு​வைச் சேர்ந்​தவர் சங்​கர் (32).

இவர் தனது தாயார் பெயரில் வாரிசு சான்​றிதழ் கேட்டு விண்​ணப்​பித்​திருந்​தார். இந்​நிலை​யில், கோவில்​ப​தாகை கிராம உதவி​யாளர் ரவி, செல்​போன் மூலம் சங்​கரை தொடர்பு கொண்டு விஏஓ அலு​வல​கத்​துக்கு வரு​மாறு தெரி​வித்​துள்​ளார்.

சங்​கர் கடந்த 25-ம் தேதி அங்கு சென்று விஏஓ அரவிந்தை சந்​தித்​துள்​ளார். அப்​போது அவர் கிராம உதவி​யாளர் ரவி​யிடம் பேசு​மாறு கூறி​யுள்​ளார்.

அதன்​படி ரவி​யிடம் பேசி​ய​போது, அவர் வாரிசு சான்​றிதழ் அளிக்க பரிந்​துரைக்க ரூ.10 ஆயிரம் அளிக்​க வேண்​டும் எனக் கூறி​யுள்​ளார். பின்​னர் பேரம் பேசி ரூ.8 ஆயிரம் தரு​வ​தாக சங்​கர் ஒப்​புக்​கொண்​டார்.

ஆனால், லஞ்​சம் கொடுக்க விரும்​பாத சங்​கர், இதுகுறித்து திரு​வள்​ளூர் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸாரிடம் புகார் அளித்​தார்.

பின்​னர் அவர்​களின் ஆலோ​சனை​யின்​படி, நேற்று காலை கிராம உதவி​யாளர் ரவி​யிடம் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை சங்​கர் அளித்​தார்.

அங்கு மறைந்​திருந்த டிஎஸ்பி ஜெயக்​கு​மார் தலை​மையி​லான லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் லஞ்​சம் பெற்​ற​தாக ரவியை கைது செய்​தனர். அவர் கொடுத்த வாக்​குமூலத்​தின்​ அடிப்படையில் விஏஓ அரவிந்தையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT