கோப்புப் படம்

 
க்ரைம்

உண்டியல் திருட்டு: கோயில் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

கோவை: கோவை கோனி​யம்​மன் கோயில் உண்​டியல் திருடப்பட்ட விவகாரத்தில் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இக்கோயிலில் கடந்த 15-ம் தேதி உண்டியல் காணிக்கை எண்​ணப்பட்டது. அங்​கிருந்த ஊழியர்​கள் சிலர் யாரும் கவனிக்காத சமயத்​தில் ஒரு உண்டியலை தனி​யாக எடுத்து வைத்​தனர். பின்​னர், அன்​றைய தினம் இரவு அதிலிருந்த காணிக்​கைகளை ஒரு பையில் எடுத்​துச்சென்​றனர்.இதுகுறித்த புகாரின்பேரில் கோயில் பூசாரி கிருஷ்ண​ராஜ், ஊழியர்கள் பாலசுப்​பிரமணி​யம், சரவணன், பிரதீப்​கு​மார் ஆகியோரை உக்​கடம் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்நிலையில் கைது செய்​யப்​பட்​ட​வர்​கள் மற்​றும் இந்த திருட்டை கண்​டு​பிடிக்​காமல் இருந்​த​தாக சரக ஆய்​வாளர்​கள் ராம்​கு​மார், உதயகு​மார், செயல் அலு​வலர் குமார் ஆகியோரை பணியிடை நீக்​கம் செய்​து, அமைச்​சர் ரமேஷ் உத்​தர​விட்​டார். மேலும், உதவி ஆணை​யர் உஷா நந்​தினிக்கு விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT