க்ரைம்

ராமநாதபுரம் | ஆன்லைன் பண மோசடி வழக்கில் காவலர் உட்பட 7 பேர் கைது

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ஆன்​லைன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்​கில் போலீஸ்​காரர் உட்பட 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர். சென்​னை​யில் கடந்த 2025-ம் ஆண்டு ஆன்​லைன் மோசடி​யில் பல கோடி ரூபாய் இழந்​த​தாக சிலர் அளித்த புகாரின்​பேரில் சென்னை சைபர் கிரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை செய்​தனர்.

இந்த வழக்​கில், சென்​னையைச் சேர்ந்த முக்​கிய குற்​ற​வாளி​களை போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும், மோசடி பணத்தை போலி வங்​கிக் கணக்​குத் தொடங்கி பணப்பரிவர்த்​தனை செய்​தது தெரிய​வந்​தது.

          

அதில் ராம​நாத​புரம் புல்​லங்​குடியைச் சேர்ந்த தமிழ்​நாடு சிறப்​புக் காவல் படை போலீ​ஸார் பிரதீப், போகலூரைச் சேர்ந்த அப்​ரின், சேது​பாண்​டியன், சல்​மான் கான், சத்​திரக்​குடியைச் சேர்ந்த தவமுரு​கன், முகேஷ்வரன், பரமக்​குடியைச் சேர்ந்த ஆசிக் சமூதீன் ஆகிய 7 பேரின் வீடு​களில் சென்னை சைபர் கிரைம் ஆய்​வாளர் தலை​மையி​லான போலீ​ஸார் திடீர் சோதனை நடத்​தினர்.

இதில் 10-க்​கும் மேற்​பட்ட வங்​கிக் கணக்கு புத்​தகங்​கள், ஏடிஎம் கார்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. மேலும், 7 பேர் பயன்​படுத்தி வந்த கார், இரு சக்கர வாக​னங்​கள், சொத்து ஆவணங்​கள் அனைத்​தும் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

இந்த 7 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்து சென்னை சைபர் கிரைம் அலு​வல​கத்​துக்​கு அழைத்​துச்​ சென்​றனர்​.

SCROLL FOR NEXT