குமர​வேல், வேலன், அய்​யப்​பன், கலைச்​செல்​வன்

 
க்ரைம்

படப்பை | 2 மாணவர்கள் கொலை வழக்கில் 7 பேர் கைது

செய்திப்பிரிவு

படப்பை: முன்​விரோதம் காரண​மாக படப்பை அருகே கல்​லூரி மாணவர்​கள் 2 பேரை வெட்டி கொலை செய்த வழக்​கில் 2 சிறு​வர்​கள் உள்​ளிட்ட 7 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

படப்பை அருகே வரத​ராஜபுரம் பகு​தியை சேர்ந்​தவர்​கள் பரத் (22), சீனு(23), நண்​பர்​களான இரு​வரும் குரோம்​பேட்​டை​யில் உள்ள தனி​யார் கல்​லூரி​யில் டிப்​ளமோ இன்​ஜினியரிங் படித்து வந்​தனர். துக்க நிகழ்​சிகளுக்கு கானா பாடல்​களை பாடி வந்​தனர்.

இந்​நிலை​யில் கடந்த சனிக்​கிழமை இரவு ஒரகடம் பகு​தி​யில் துக்க நிகழ்ச்சி ஒன்​றில் கானா பாடல் பாடிய பின்​னர் இரு​வரும் படப்பை அருகே ஒரத்​தூர் ஊராட்​சிக்கு உட்​பட்ட அம்​மணம்​பாக்​கத்​தில் தங்​களது நண்​பர் லோகேஷ் என்​பவரின் வீட்​டில் தங்​கினர்.

இந்​நிலை​யில் கடந்த 17-ம் தேதி இரண்டு இருசக்கர வாக​னங்​களில் வந்த ஏழு பேர் கொண்ட கும்​பள் பரத், சீனு இரு​வரை​யும் வெட்டி கொலை செய்து தப்பி சென்​றனர். இந்த சம்​பவம் குறித்து படப்பை போலீ​ஸார் உடல்​களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்​பினர்.

இந்த சம்​பவம் அந்த பகு​தி​யில் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யதோடு எதிர்க்​கட்​சிகளி​களும் தங்​கள் கண்​டனத்தை பதிவு செய்​திருந்​தனர். இதனிடையே குற்​ற​வாளி​களை பிடிக்க 4 தனிப்​படை அமைத்து போலீ​ஸார் தீவிர​மாக தேடி வந்​தனர்.

இந்​நிலை​யில், இந்த கொலை வழக்​கில் தொடர்​புடைய முடிச்​சூரை சேர்ந்த ரவுடி குமர​வேல் (20), வேலன் (19), பல்​லா​வரத்தை சேர்ந்த அய்​யப்​பன் (26), புதுபெருங்​களத்​துரை சேர்ந்த கலைச்​செல்​வம் (20), படப்​பையை சேர்ந்த சந்​தோஷ் மற்​றும் 16, 17 வயதுடைய 2 சிறு​வர்​கள் என 7 பேரை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

குமர​வேலுக்​கும், பரத்​துக்​கும் முன்​விரோதம் இருந்து வந்​தது. இதனால் பரத், குமர​வேலை கொலை செய்ய திட்​ட​மிட்​டுள்​ளார். இதற்​காக குமர​வேலுடன் சுற்றி திரிந்த 16 வயது சிறு​வனை தொடர்பு கொண்ட பரத், குமர​வேலை கொலை செய்ய அவன் இருக்​கும் இடத்தை காட்ட வேண்​டும் என மிரட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அந்த சிறு​வன் குமர​வேலிடம் கூறி​யுள்​ளார். இதையடுத்து குமர​வேல் தன் நண்​பர்​களு​டன் சேர்ந்து பரத்தை சரமாரி​யாக வெட்டி கொலை செய்​துள்​ளார். பரத்தை வெட்​டும்​போது தடுக்க வந்த அவரது நண்​பர் சீனுவை​யும் அந்த கும்​பல் வெட்டி கொலை செய்​தனர் என போலீ​ஸார் தெரி​வித்​தனர். இந்த சம்​பவம் குறித்து போலீ​ஸார் மேலும் வி​சா​ரித்​து வரு​கின்றனர்.

SCROLL FOR NEXT