க்ரைம்

ரியல் எஸ்​டேட் அதிபர் கொலை: 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

செய்திப்பிரிவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்​டம் தேன்​க​னிக்​கோட்டை அருகே கண்​ட​காணப்​பள்​ளியைச் சேர்ந்​தவர் லட்​சுமி நாராயணா (37). மாரச்​சந்​திரத்​தைச் சேர்ந்​தவர் மகேஷ்கு​மார். இரு​வரும் இணைந்து ரியல் எஸ்​டேட் தொழிலில் ஈடு​பட்டு வந்​தனர்.

இந்​நிலை​யில், மகேஷ்​கு​மாருக்கு கடனாக கொடுத்த ரூ.30 லட்​சத்தைக் கேட்டு லட்​சுமி நாராயணா அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்​திரமடைந்த மகேஷ் கு​மார், 2018-ம் ஆண்டு தனது நண்​பர்​களு​டன் சேர்ந்து லட்​சுமி நாராயணாவை காரில் கடத்​திச் சென்று கொலை செய்து உடலை பஞ்​சப்​பள்ளி சாலை​யில் வீசிச் சென்​றார்.

          

இதுதொடர்​பாக தேன்​க​னிக்​கோட்டை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரித்​து, மகேஷ்கு​மார் மற்​றும் அவரது நண்​பர்​களான ராஜ்கு​மார், வெங்​க​டாஜலப​தி, சுரேஷ், தக்​கட்​டியைச் சேர்ந்த சுரேஷ், பெண்​ணாகூர் ஹரீஷ், கர்​நாடக மாநிலம் சூரி ஆகிய 7 பேரை கைது செய்​தனர்.

இதுதொடர்​பான வழக்கு ஓசூர் கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. இந்நிலை​யில் நீதிபதி நேற்று தீர்ப்​பளித்​தார்.

இதில், வழக்கு விசா​ரணை​யின்​போது சுரேஷ் உயி​ரிழந்த நிலை​யில், மகேஷ்கு​மார் உள்​ளிட்ட 6 பேருக்​கும் தலா இரட்டை ஆயுள் தண்​டனை​யும், தலா ரூ.20,000 அபராத​மும் விதித்தார். மேலும், தண்​டனையை ஏக காலத்​தில் அனுபவிக்​க​வும் உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT