வலிப்பு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போக்சோ கைதி, கழிவறை வென்டிலேட்டர் வழியாக தப்பிச் சென்றார்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகேயுள்ள தாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (37). கட்டிடத் தொழிலாளியான இவர், 6.9.2019 அன்று 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தாராபுரம் மகளிர் காவல்துறையினரால் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டார். பின்னர், 2.10.2019 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சுப்பிரமணிக்கு கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி வலிப்பு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (பிப்.13) அதிகாலை கைதிகள் வார்டில் உள்ள கழிவறைக்குச் சென்ற கைதி சுப்பிரமணி, அங்கிருந்த வென்டிலேட்டர் வழியாக தப்பிச் சென்றார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தவறவிடாதீர்!