ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில், பறிமுதல் செய்யப்பட்ட 510 கிலோ கஞ்சா ஆவடி காவல் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி முன்னிலையில் அழிக்கப்பட்டது.

 
க்ரைம்

ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 510 கிலோ கஞ்சா அழிப்பு

செய்திப்பிரிவு

ஆவடி: ஆவடி காவல் ஆணை​யரக எல்லை பகு​தி​களில், 90 வழக்​கு​களில் பறி​முதல் செய்​யப்​பட்ட 510 கிலோ கஞ்​சா, எரித்து அழிக்​கப்​பட்​டது. ஆவடி காவல் ஆணை​யரக எல்லை பகு​தி​களில், கஞ்​சா, குட்கா போன்ற போதை பொருட்​கள் நடமாட்​டத்தை முற்​றி​லும் கட்​டுப்​படுத்​தும் நடவடிக்​கை​களில், ஆவடி காவல் ஆணை​யரகம் ஈடு​பட்டு வரு​கிறது.

அதன்​படி, ஆவடி காவல் ஆணை​யரகத்​தின் கீழ் உள்ள காவல் நிலை​யங்​கள், ஆவடி மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு​களில் கடந்த சில மாதங்களில் 90 கஞ்சா வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. இவ்​வழக்​கு​கள் தொடர்​பாக கைதான வர்​களிட​மிருந்து 510 கிலோ எடை​யுள்ள கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது.

பறி​முதல் செய்​யப்​பட்ட கஞ்​சாவை அழிப்​ப​தற்​காக நீதி​மன்ற உத்​தரவு பெறப்​பட்​டது. இதை தொடர்ந்​து, ஆவடி காவல் கூடு​தல் ஆணை​யர் பவானீஸ்​வரி தலை​மை​யில், காவல் துணை ஆணை​யர் பெரோஸ்​கான் அப்​துல்​லா, தடய அறி​வியல் துணை இயக்​குநர் ஷோபியா ஜோசப் ஆகியோர் கொண்ட போதை பொருள் அழிப்பு குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

அக்​குழு​வினர் மற்​றும் ஆவடி மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு உதவி ஆணை​யர் பொன்​சங்​கர் ஆகியோ​ரால், நேற்று முன்​தினம் செங்​கல்​பட்டு மாவட்​டம், தென்​மேல்​பாக்​கம் பகு​தி​யில் உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் உள்ள இன்​சுலேட்​டரில், 510 கிலோ கஞ்சா எரித்து அழிக்​கப்​பட்​டது

மேலும், 2024 -ம் ஆண்டு 112 வழக்​கு​களில் பறி​முதல் செய்​யப்​பட்ட சுமார் ரூ.40 லட்​சம் மதிப்​புள்ள 399 கிலோ கஞ்சா மற்​றும் 2025 -ம் ஆண்டு 581 வழக்​கு​களில் பறி​முதல் செய்​யப்​பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்​புள்ள 2,892 கிலோ கஞ்சா எரித்து அழிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT