க்ரைம்

ரூ.500 கோடி ஐஸ் போதைப் பொருள் பறிமுதல்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ​கொழும்பு துறை​முகத்​தில் ரூ.500 கோடி மதிப்​பிலான 420 கிலோ ஐஸ் போதைப் பொருள் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

கொழும்பு துறை​முகத்​தில் கண்​டெய்​னர் மூலம் போதைப் பொருட்​கள் கடத்தி வரப்​பட்​டுள்​ளதாக கிடைத்த ரகசி​யத் தகவலின் அடிப்​படை​யில், மத்​திய குற்​றப் புல​னாய்வு அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

கொழும்பு துறை​முகத்​தில் சந்​தேகத்​துக்​குரிய கண்​டெய்​னர் ஒன்றை சோதனை​யிட்​ட​தில், 420 கிலோ ஐஸ் போதைப்​பொருள் பறி​முதல் செய்​யப்​பட்​டது. அந்த கண்​டெய்னரில் கொண்டு வரப்​பட்ட டவலுக்குள் ஐஸ் போதைப் பொருட்கள் மறைத்து வைக்​கப்​பட்​டிருந்​தன.

முதற்​கட்ட விசா​ரணை​யில், இந்த போதைப் பொருள் பாகிஸ்​தானில் இருந்து இலங்​கைக்கு கப்​பல் மூலம் கண்​டெய்​னரில் கடத்தப்​பட்​டது தெரிய​வந்​தது.

இதுதொடர்​பாக இலங்​கை​யின் தெமட்​ட​கொடை பகு​தி​யைச் சேர்ந்த வர்த்தகர் ஒரு​வர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். இது தொடர்​பாக மத்​திய குற்றப் புல​னாய்வு அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். பறி​முதல் செய்​யப்​பட்​ட ஐஸ்போதைப் பொருளின் சர்​வ​தேச மதிப்பு ரூ.500 கோடி​யாகும்.

SCROLL FOR NEXT