க்ரைம்

சென்னையில் பட்டப்பகலில் ரூ.36 லட்சம் வழிப்பறி: முன்னாள் பெண் ஊழியர் உள்பட 5 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் பட்​டப்​பகலில் ரூ.36 லட்​சம் வழிப்பறி செய்​யப்​பட்ட வழக்​கில் முன்​னாள் பெண் ஊழியர் உள்பட 5 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்னை கொளத்​தூர் சாஸ்​திரி நகர் மெயின் ரோட்​டைச் சேர்ந்த கந்​தன் (52), பாரி​முனை வரத​முத்​தப்பா தெரு​வில் உள்ள மொத்த விலை மளி​கைக்​கடை​யில் மேலா​ள​ராக வேலை செய்து வரு​கிறார்.

கடந்த 14-ம் தேதி மதி​யம், முந்​தைய நாள் வியா​பார​மான ரூ.36 லட்​சத்தை வங்​கி​யில் செலுத்​து​வதற்​காக, கடை ஊழியர் கணேசனுடன் பணப்​பையை எடுத்​துக்​கொண்டு பாரி​முனை குடோன் தெரு​வில் நடந்து சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது அங்கு பைக்​கு​களில் வந்த மர்ம நபர்​கள், கந்​தனை ஹெல்​மெட்​டால் தாக்​கினர். தொடர்ந்து கணேசனைக் கத்​தி​யைக் காட்டி மிரட்​டி, அவர் வைத்​திருந்த ரூ.36 லட்​சம் அடங்​கிய பணப்​பையை பறித்​துக்​கொண்டு தப்​பிச் சென்​றனர்.

இந்த தாக்​குதலில் ரத்​தக்​காயமடைந்த கந்​தன், ராஜீவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

இதுகுறித்து பூக்​கடை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர். கண்​காணிப்பு கேமரா காட்​சிகளை ஆய்வு செய்து வழிப்​பறி​யில் ஈடு​பட்​ட​வர்​களை அடை​யாளம் கண்​டனர்.

இதையடுத்​து, வழிப்​பறி​யில் ஈடு​பட்ட சென்னை வியாசர்​பாடியைச் சேர்ந்த பாலாஜி (28), பிராட்​வேயைச் சேர்ந்த சீனி​வாசன் (29), கல்​யாணபுரத்​தைச் சேர்ந்த விக்​னேஷ் (30), விழுப்​புரம் மாவட்​டம் விக்​கிர​வாண்​டியைச் சேர்ந்த ஜெகன் (19), தண்​டை​யார்​பேட்​டையைச் சேர்ந்த ஷாலினி (27) ஆகிய 5 பேரை கைது செய்​தனர்.

அவர்​களிட​மிருந்து வழிப்​பறி செய்​யப்​பட்ட பணத்​தில் ரூ.1 லட்​சம் மீட்​கப்​பட்​டது. மேலும், குற்​றச்​செயலுக்கு பயன்​படுத்​தி​ய​தாக ஒரு ஆட்​டோ​வும் பறி​முதல் செய்​யப்​பட்​டது. போலீஸ் விசா​ரணை​யில், ஷாலினி ஏற்​கெனவே சம்​பந்​தப்​பட்ட மளி​கைக்​கடை​யில் வேலை செய்​து, சில ஆண்​டு​களுக்கு முன்பு பணியை விட்டு நின்​றவர் என்​பது தெரிய​வந்​தது.

மேலும், இவர்​தான் வழிப்​பறிக்கு மூளை​யாக செயல்​பட்​டுள்​ளார் என போலீ​ஸார் தெரி​வித்​தனர். கைது செய்​யப்​பட்ட மற்றவர்கள் மீதும் குற்ற வழக்குகள் இருப்​பதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. கைது செய்​யப்​பட்ட 5 பேரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT