தாம்பரம்: மேற்குத் தாம்பரம் திருவள்ளுவர் 3-வது தெருவின் பின்புறம் தாம்பரம் காவல் நிலைய போலீஸார் ரோந்து சென்றபோது சந்தேகத்துக்கிடமாக இருந்த தாம்பரம் கடப்பேரியை சேர்ந்த சந்துரு (25), பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த விஜய் (28) ஆகியோரைப் பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 கிலோ 900 கிராம் கஞ்சா, 6 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல், கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானம் அருகே சேலையூர் போலீஸார் சோதனை நடத்தினர்.
அங்கு பிஹார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த ஹரிசங்கர் (28) என்பவரை கைது செய்த போலீஸார், அவருடன் இருந்த 17 வயது சிறுவனையும் பிடித்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.