மும்பை: மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் அலுவலக அதிகாரி போல் நடித்து நகைக் கடைக்காரரிடம் ரூ.2.8 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மும்பை லோகமான்ய திலக் மார்க் காவல் நிலையத்தில் சைலேஷ் ஜெயின் (57) என்ற நகைக் கடைக்காரர் கடந்த திங்கள்கிழமை புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகாரில், “கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரியில் பரேஷ் தாக்கர் (32) என்பவர் எனக்கு அறிமுகமானார். மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தில் குரூப்-1 அதிகாரியாக பணியாற்றுவதாக அவர் என்னிடம் கூறினார். பரேஷ் தாக்கர், அவரது மனைவி, மாமியார், முகவர் பிர்ஜு சல்லா ஆகிய நால்வரும் 2024 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை பல்வேறு சாக்குப்போக்குகளின் கீழ் பணம், தங்கம் மற்றும் வைரங்களை என்னிடம் பெற்றுக்கொண்டு ரூ.2.8 கோடி மோசடி செய்துவிட்டனர்" என்று கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.