க்ரைம்

பெரியபாளையம் அருகே ரவுடியை கொலை செய்த 4 பேர் கைது

செய்திப்பிரிவு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ரவுடியை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே உள்ள அரியப்​பாக்​கம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் கோகுல் (26). ரவுடி​யான இவர் மீது கொலை வழக்​கு, அடிதடி உள்​ளிட்ட பல வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன.

          

இந்​நிலை​யில், கட்​டுமான பணி​யில் ஈடு​பட்டு வந்த கோகுல், தன் தாயுடன் வசித்து வந்​தார். இந்​நிலை​யில், நேற்று முன் தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற கோகுல் இரவு வீடு திரும்​ப​வில்​லை.

இந்​நிலை​யில், நேற்று காலை பெரிய​பாளை​யம் அருகே தண்​டுமா நகர் பகு​தி​யில் காலி இடத்​தில் கோகுல், கும்​பல் ஒன்​றால் தலை, முகம், கழுத்​து, வயிறு உள்​ளிட்ட பகு​தி​களில் அரி​வாளால் வெட்டி கொலை செய்​யப்​பட்டு கிடந்​தார்.

இதுதொடர்​பாக வழக்​குப் பதிவு செய்து பெரிய​பாளை​யம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். அதன் அடிப்​படை​யில், நேற்று பகலில் தண்​டுமா நகர் பகு​தியை சேர்ந்த தீனா (22), சிவக்​கு​மார் (21), பேரரசு (20), தியாக​ராஜன் (19) ஆகியோரை கைது செய்​தனர்.

போலீஸார் தீவிர விசாரணை பெரியபாளையம் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மது​போதை​யில் ஏற்​பட்ட தகராறில் கோகுல் கொலை செய்​யப்​பட்​டது தெரிய வந்​த​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT