க்ரைம்

லஞ்சம் பெற்று பிரபல ரவுடிக்கு சலுகை வழங்கியதாக குற்றச்சாட்டு: 3 போலீஸார் பணியிடை நீக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: லஞ்சம் பெற்று பிரபல ரவுடிக்கு சலுகை வழங்​கிய குற்​றச்​சாட்​டில், ஆயுதப்​படை இன்​ஸ்​பெக்​டர் உள்பட 3 போலீ​ஸார் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்​ளைக்​காளி (40). இவரை நீதி​மன்​றத்​துக்கு அழைத்​துச் செல்​லும் பணியில் ஈடு​பட்​டிருந்த சென்​னையைச் சேர்ந்த ஆயுதப்​படை போலீ​ஸார், அவருக்கு விதியை மீறி சலுகைகள் வழங்​கிய​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இதுகுறித்​து, விரி​வான விசா​ரணை நடத்த உயர் அதி​காரிகள் உத்தர​விட்​டனர். அதன்​படி, நடை​பெற்ற விசா​ரணை​யில் புழல் சிறை​யில் இருந்து நீதி​மன்​றத்​துக்​கும், நீதி​மன்​றத்​திலிருந்து புழல் சிறைக்​கும் அழைத்​துச் செல்​லும்​போது வழிக்​காவலுக்​குச் சென்ற ஆயுதப்​படை காவல் ஆய்​வாளர் மாரி​முத்​து, எஸ்​ஐ-க்​கள் திரு​முரு​கன், செல்​லதுரை ஆகியோர் லஞ்​ச​மாக பணம் பெற்று வெள்​ளைக்​காளிக்கு சலுகை காட்​டியது தெரிய​வந்​து.

இதையடுத்​து, 3 பேரை​யும் சென்னை காவல் ஆணை​யர் அபின் தினேஷ் மோடக் பணியிடை நீக்​கம் செய்​தார்.

ரவுடி​யின் பின்​னணி

மதுரையைச் சேர்ந்த வெள்​ளைக் காளி மீது 20-க்​கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் உள்​ளன. சென்​னை, புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த வெள்​ளைக் காளியை, குற்ற வழக்கு தொடர்​பாக போலீ​ஸார் திண்​டுக்​கல் மற்​றும் புதுக்​கோட்டை நீதி​மன்​றங்​களுக்கு அழைத்​துச் சென்​று​விட்​டு, கடந்த ஜனவரி​யில் மீண்​டும் சென்னை புழல் சிறைக்கு போலீஸ் வேனில் அழைத்து வந்தனர்.

பெரம்​பலூர் மாவட்​டம், எறையூர் சுங்​கச்​சாவடி அருகே வேனை நிறுத்​தி, ஓட்​டலில் சாப்​பிடு​வதற்​காக வெள்​ளைக் காளியை அழைத்​துச் சென்​ற​போது போலீஸ் வாக​னத்தை பின்​தொடர்ந்து வந்த கும்​பல், நாட்டு வெடிகுண்​டு​களை வீசி வெள்​ளைக்​காளியை கொலை செய்ய முயன்​றது.

இதில், அவர் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்பினார். 3 போலீ​ஸார் காயம் அடைந்​தனர். இதுதொடர்​பாக ரவுடி​ கொட்​டு​ராஜாவை பெரம்​பலூர் போலீ​ஸார் என்​க​வுண்ட்​டரில் தீர்த்​துக் கட்​டினர்.

SCROLL FOR NEXT