கோகுல்

 
க்ரைம்

ஆவடி: வெல்டர் கொலை சம்பவத்தில் நண்பர் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

ஆவடி: திருமுல்லைவாயலில் வெல்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நண்பர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல், நாகம்மை நகரைச் சேர்ந்தவர் கோகுல் (31). வெல்டராக பணிபுரியும் இவர் திருமுல்லைவாயல் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியாவார்.

அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ராஜேஷும் (31), கோகுலும் நண்பர்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோகுல், ராஜேஷ் மற்றும் ராஜேஷின் நண்பர்களான, திருநின்றவூரைச் சேர்ந்த நிர்மல்குமார் (27), சென்னை, ராஜமங்கலத்தைச் சேர்ந்த சந்தோஷ் (30) ஆகிய 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது மதுபோதையில் கோகுலுக்கும், ராஜேஷுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ராஜேஷை கோகுல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நிர்மல்குமார், சந்தோஷ் ஆகியோர் கோகுலை கீழே தள்ளினர்.

இதனால் கோபமடைந்த கோகுல், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஷை வெட்ட முயன்றபோது, தவறுதலாக கத்தி கீழே விழுந்துவிட்டது. அதைராஜேஷ் எடுத்து கோகுலை கொலை செய்தார்.

தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீஸார், கோகுலின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவுசெய்து முதல்கட்ட விசாரணை நடத்தினர். அவ்விசாரணையின் அடிப்படையில் ராஜேஷ், நிர்மல்குமார், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT