ஜெயக்​கு​மார்​, சத்​யா, தவ்​லத்​பேகம்

 
க்ரைம்

காஞ்சிபுரம் தாய்-மகள் கொலை வழக்கில் 3 பேருக்கு 6 ஆயுள் சிறை தண்டனை விதிப்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்​சிபுரம் மாவட்​டம், குன்​றத்​தூர் இரண்​டாம் கட்​டளை, அக்​னீஸ்​வரர் கோயில் தெரு​வில் வசித்து வந்​தவர்​கள் மூதாட்டி வசந்தா (65), அவரது மகள் தேன்​மொழி (35).

இவர்​கள் இரு​வரும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்​பர் 28-ம் தேதி மர்​ம​மான முறை​யில் கொலை செய்​யப்​பட்டு கிடந்​தனர். வீட்​டில் இருந்த நகை மற்​றும் பணம் கொள்​ளை​யடிக்​கப்​பட்டு இருந்​தது.

இதுகுறித்து, குன்​றத்​தூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டனர். விசா​ரணை​யில், வீட்​டில் வேலைக்​காரி​யாக இருந்த சத்யா (25), அவரது தோழி தவ்​லத்​பேகம் (28), மற்​றும் சத்​யா​வின் ஆண் நண்​பர் ஜெயக்​கு​மார் (30) ஆகிய மூவர் சதித் திட்​டம் தீட்​டி, நகை மற்​றும் பணத்​தைக் கொள்​ளை​யடிக்​கும் நோக்​கில் இந்​தக் கொலை​யைச் செய்​தது தெரிய​வந்​தது.

முதலில், மூவரும் வீட்​டில் இருந்த வசந்​தாவைக் கொலை செய்​துள்​ளனர். பின்​னர், வேலை முடிந்து வீட்​டுக்கு வந்த தேன்​மொழி​யின் கழுத்தை நெரித்​துக் கொன்​றனர்.

இந்​தக் கொலைச் சம்​பவத்​தின்​போது, தேன்​மொழி​யின் 7 வயது மகள் சுரபிஸ்ரீயை​யும், 8 மாதப் பெண் குழந்​தையை​யும் கொலை செய்ய முயன்​ற​

தாக​வும், தாக்​கிய​தா​வும் போலீஸ் தரப்​பில் கூறப்​படு​கிறது. இந்​தக் கொலைச் சம்​பவத்தை சுரபி, தனது அக்​கம்​பக்​கத்​தினரிடம் தெரி​வித்​தார்.

இதையடுத்​து, அவர்​கள் போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். இதன் அடிப்​படை​யில் குற்​ற​வாளி​கள் மூவரும் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்​கு, காஞ்​சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது.

இந்த வழக்​கில், கொலை, கொள்​ளை, கொலை முயற்சி உள்​ளிட்ட குற்​றங்​கள் நிரூபிக்​கப்​பட்ட நிலை​யில், குற்​ற​வாளி​கள் மூவருக்​கும் தலா 6 ஆயுள் தண்​டனை​யும், இதனை ஏககாலத்​தில் அனுபவிக்​க​வும் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​து.

SCROLL FOR NEXT