முரு​கன், ஜெகதீஷ்

 
க்ரைம்

சென்னை | ஓய்வு பெற்ற தலைமைச் செயலக அதிகாரி வீட்டில் திருடிய 2 இளைஞர்கள் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஓய்வு பெற்ற தலை​மைச் செயலக அதிகாரி வீட்​டில் திருடிய இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை பெர​வள்​ளூரில் உள்ள பெரி​யார் நகர் 1-வது தெரு​வில் வசிப்​பவர் அசோக்​கு​மார் (72). தலை​மைச் செயல​கத்​தில் இணைச் செய​லா​ள​ராக பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர்.

இவர் கடந்த 17-ம் தேதி வீட்​டைப் பூட்​டி​விட்டு மனை​வி​யுடன் வேளச்​சேரி​யிலுள்ள அண்​ணன் வீட்​டுக்​குச் சென்​றார்.மறு​நாள் காலை வீடு திரும்​பிய​போது வீட்​டின் பூட்டு உடைக்​கப்​பட்​டு, பீரோ​வில் வைத்​திருந்த 22 பவுன் தங்க நகைகள், 2 கைக்​கடி​காரங்​கள், ரூ.20 ஆயிரம் மற்​றும் பட்​டுப் புட​வை​கள் திருடு​போ​யிருப்​பது தெரிய​வந்​தது.

          

அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்​பாக பெர​வள்​ளூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல்​கட்​ட​மாக சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யில் ஆராயப்​பட்​டது.

இதில் அசோக்​கு​மார் வீட்​டில் திருட்​டில் ஈடு​பட்​டது திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யத்​தைச் சேர்ந்த முரு​கன் என்ற தீனா (28), ஜெகதீஷ் (28) என்​பது தெரிய​வந்​தது.

தலைமறை​வாக இருந்த இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். தொடர்ந்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் முரு​கன் பெரிய​பாளை​யம் காவல் நிலைய சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி என்​பதும், இவர் மீது ஏற்​கெனவே 15 திருட்டு வழக்​கு​களும், ஜெகதீஷ் மீது 3 திருட்டு வழக்​கு​களும் உள்​ளது தெரிய​வந்​தது. இதையடுத்​து, இரு​வரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்​.

SCROLL FOR NEXT