க்ரைம்

காஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு: சிறுவன் உள்ளிட்ட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: கேளம்​பாக்​கம் அருகே நாவலூரில் சாமுண்​டீஸ்​வரி நகர் உள்​ளது. இதில் 2-வது தெரு​வில் அதே ஊரைச் சேர்ந்த சங்​கர் என்​பவருக்கு சொந்​த​மான 3 வீடு​கள் உள்​ளது. இதில் தனித்​தனி குடும்​பத்​தினர் வாடகைக்கு குடி​யிருந்து வரு​கின்​றனர்.

ஒரு குடி​யிருப்​பில் முரு​கன் (55) என்​பவரும், அடுத்த குடி​யிருப்​பில் வைர​முத்து (40) என்​பவர் தனது மனைவி செல்வி (40), மகன் பிரதீப் (7) ஆகியோ​ருடன் வசிக்​கிறார்.

          

மற்​றொரு குடி​யிருப்​பில் சஞ்​சீவ் குமார் (31), மனைவி சோனியா (27), மாமி​யார் சித்ரா (46), மைத்​துனி சுதா, மகள் கிருஷி​கா, மகன் தீரன் ஆகியோ​ருடன் வசித்து வரு​கிறார்.

இதில் வைர​முத்து என்​பவர் ஓ.எம்​.ஆர். சாலை​யில் உள்ள தனி​யார் மேன்​சன்​களில் உள்​ளவர்​களுக்கு உணவு சமைத்து கொடுக்​கும் தொழில் செய்து வரு​கிறார். இதனால் வீட்​டில் ஏராள​மான காஸ் சிலிண்​டர்​களை வைத்​திருப்​பார்.

இந்​நிலை​யில் நேற்று காலை சுமார் 7.30 மணி​யள​வில் வைர​முத்து வீட்​டில் அனை​வரும் தூங்​கிக் கொண்டு இருந்​த​போது, காஸ் கசிவு வாசனை வந்​த​தால் வைர​முத்​து​வின் மனைவி செல்வி எழுந்து மின் விளக்கை போட்​டுள்​ளார். அப்​போது பலத்த சத்​தத்​துடன் சிலிண்​டர் வெடித்​துச் சிதறியது.

இதில் அவர்​களின் வீடு முழு​வது​மாக இடிந்து வைர​முத்​து​வின் மகன் பிரதீப் உடல் முழு​வதும் கரு​கிய நிலை​யில் வெளியே ஓடி வந்​தான். பக்​கத்து குடி​யிருப்​பில் தூங்​கிக் கொண்​டிருந்த சஞ்​சீவ்​கு​மார் (30), அவரது மனைவி சோனியா (28), மகள் கிருஷிகா (4), மகன் தீரன் (ஒன்​றரை வயது), மாமி​யார் சித்ரா (55) ஆகியோர் கட்​டிட இடி​பாடு​களுக்​குள் சிக்​கிக் கொண்​டனர்.

முன் குடி​யிருப்​பில் இருந்த முரு​க​னும் இடி​பாடு​களில் சிக்கி உயிருக்கு போராடி​னார். பயங்கர சத்​தம் கேட்டு அக்​கம் பக்​கத்​தில் இருந்​தவர்​கள் ஓடி வந்து பார்த்​த​போது சிறு​வன் பிரதீப் தீக்​கா​யங்​களு​டன் வெளியே வந்​தான்.

மற்​றவர்​கள் இடி​பாடு​களுக்​குள் இருந்து மீட்​கப்​பட்​டனர். இதில் உடல் நசுங்கி சஞ்​சீவ்​கு​மாரின் மகள் கிருஷிகா (4), மகன் தீரன் (ஒன்​றரை வயது) ஆகியோர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

இதையடுத்து சிறுசேரி தீயணைப்பு மற்​றும் மீட்​புப் படை​யினர் உடல்​களை மீட்​டனர். மேலும், பலத்த காயங்​களு​டன் உயிருக்கு போராடிய மற்ற 7 பேரும் மீட்​கப்​பட்டு ஆம்​புலன்ஸ் மூலம் படூர் தனி​யார் மருத்​து​வ​மனைக்​கும், செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனைக்​கும் அனுப்பி வைக்​கப்​பட்​டனர். தகவல் அறிந்து வந்த தாழம்​பூர் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு வந்து மீட்பு பணி​யில் ஈடு​பட்​டு. பின்னர், வழக்​குப் பதிவு செய்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT