மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் சிறையிலடைப்பு

மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் சிறையிலடைப்பு
Updated on
1 min read

சென்னை: மடிப்​பாக்​கம், ராம்​நகர் வடக்​கு, 3-வது தெரு​வைச் சேர்ந்​தவர் அபர்ணா (43). இவருக்கு முகநூல் மூலம் கடந்​தாண்டு திருநெல்​வேலி டவுண் பகு​தி​யைச் சேர்ந்த ​ராம் கமல் (33) என்​பவர் அறி​முக​மா​னார்.

இவர் தனக்கு அரசு அதி​காரி​கள் மட்​டுமல்​லாமல் அரசி​யல்​வா​தி​களை​யும் நன்கு தெரி​யும் என்​றும், தான் நினைத்​தால் மருத்​து​வக் கல்லூரிகளில் சீட் மற்​றும் அரசு வேலைகளை கூட வாங்​கித் தர முடி​யும் எனவும் தெரி​வித்​துள்​ளார்.

இதை உண்​மையென நம்​பிய அபர்ணா தனது மகனுக்கு தனி​யார் மருத்​து​வக் கல்லூரியில் சீட் வாங்​கித் தர வேண்​டும் என கேட்​டுக் கொண்​டுள்​ளார். மேலும் கமிஷ​னாக ரூ.11 லட்​சம் கொடுத்​துள்​ளார்.

பணத்தை பெற்​றுக் கொண்ட ​ராம் கமல், உறு​தி​யளித்​த​படி சீட் வாங்​கிக் கொடுக்​க​வில்​லை. பெற்ற பணத்​தை​யும் திரும்​பக் கொடுக்​க​வில்​லை​யாம்.

இதுகுறித்து அபர்ணா மடிப்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதையடுத்து ​ராம் கமல் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

முன்​ன​தாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், ​ராம் கமல் ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​வதும், இவர் மீது ஏற்​கெனவே இதே போன்​றதொரு வழக்கு மதுரை மாவட்​டம், அண்​ணாநகர் காவல் நிலை​யத்​தில் உள்​ளதும் தெரிய​வந்​த​தாக போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் சிறையிலடைப்பு
அரசு சேவைகள் கிராமங்களைச் சென்றடைவதில் கிராம அஞ்சல் ஊழியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்: மத்திய இணையமைச்சர் புகழாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in