க்ரைம்

சென்னை | ஐடி ஊழியரிடம் வழிப்பறி: 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை திரு​வல்​லிக்​கேணி, நடேசன் சாலையை சேர்ந்​தவர் சையது அஸ்​லம் (26). இவர் தனியார் ஐடி நிறு​வனத்​தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 25-ம் தேதி மாலை ஜாம்​பஜார், திரு​வல்​லிக்​கேணி நெடுஞ்​சாலை​யில் பார்த்​தசா​ரதி கோயில் ஆர்ச் எதிரே நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு வந்த 2 மர்ம நபர்​கள், சையது அஸ்லமை வழிமறித்து தாக்​கினர்.

பின்​னர் கத்​தியை காட்டி மிரட்டி, செல்​போன் மற்​றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்​பினர். இது​குறித்து ஜாம்​பஜார் காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

விசா​ரணை​யில், சையது அஸ்லமிடம் வழிப்பறியில் ஈடு​பட்​டது ராயப்​பேட்​டையைச் சேர்ந்த சரவணன் (21), லாயிட்ஸ் ரோட்டை சேர்ந்த பெரு​மாள் (28) என்​பது தெரிந்​தது.

தலைமறைவாக இருந்த 2 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். சரவணன் மீது ஏற்​கெனவே 4 குற்ற வழக்​கு​களும், பெரு​மாள் மீது 9 குற்ற வழக்​கு​களும் இருப்​பது தெரிய​வந்​தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT