புதுக்கோட்டை: அறந்தாங்கியில் 137 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அப்துல் ஹமீது தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா நஜிமுதீன்.
இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் அவரது மனைவி மற்றும் மகள்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொழுகைக்காக பள்ளிவாசல் சென்றுவிட்டு வீடு திரும்பினர். அப்போது வீட்டுக்குள் அடையாளம் தெரியாத 2 பேர் இவர்களை கீழே தள்ளிவிட்டு தப்பியோடினர்.
பெட்டியில் வைத்திருந்த 137 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகைகளை திருடிவிட்டு தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.